ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பெரும்பாலும் இம் மாதத்தின் இரண்டாம் வாரம் அளவில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாக இது அமைந்துள்ளது.

கடந்த மாதம் சீனத் தூதுவர் மூலம் சீனாவுக்கு வருமாறு அந் நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் விடுத்த அழைப்புக்கு இணங்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலும் பரஸ்பட விடயங்கள், முதலீட்டு நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அது மாத்திரமில்லது ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கையில் சீனா மேற்கொண்டுள்ள முதலீட்டு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளன.