தியாக தீபம் திலீபனின் நிகழ்வு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு நடைபெற்ற போது வீதிக்கு நீர் விசிற யாழ்.மாநகர சபையின் நீர் தாங்கி பயன்படுத்தபட்டமை தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூருக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவிடத்தில் நடைபெற்றன. இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.  

அந்த நிகழ்வின் போது வீதியின் சூட்டை தணிக்கும் முகமாக யாழ்.மாகர சபைக்கு சொந்தமான நீர் தாங்கி நீரினை விசிற பயன்படுத்தப்பட்டது. 

குறித்த நீர் தாங்கியானது யாருடைய அனுமதியில் அங்கே கொண்டு செல்லப்பட்டது ? யார் அதனை கோரினார்கள் ? உள்ளிட்ட கேள்விகளை யாழ்.மாநகர சபை ஆணையாளருக்கு எழுத்துமூலம் அனுப்பி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விளக்கம் கோரியுள்ளனர்.