அவிசாவளை கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தால் முகாமை அண்மித்து காணப்படும் பிரதேசத்தை பாதுகாப்பான பிரதேசம் என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

இதுதொடர்பில் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த அவர்,

தீ  முழுமையாக அணைக்கப்பட்ட போதும்  ஆயுத களஞ்சியத்திலிருந்து  தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள்  கேட்டுக்கொண்டிருக்கின்றன.  

இராணுவ முகாமை சுற்றி காணப்படும் பிரதேசத்தில்  விழுந்து கிடக்கின்ற ஆயுதங்களையும் ஆயுதங்களின் பாகங்களையும் அகற்றி துப்பரவு செய்வதற்கு  96 மணிநேரம்  இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளது.  

அந்தவகையில்  96 மணி நேரத்தின் பின்னரே   இராணுவ முகாமை சுற்றியுள்ள பிரதேசங்களை  பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்க முடியும்.

 வீடுகளுக்குள்ளும்  வெளியிலும்  ஆயுத களஞ்சியத்திலிருந்து  சிதறிய   ஆயுதங்களின்  துண்டுகளும்  பாகங்களும்  வந்து விழுந்துள்ளன.  சில ஆயுதங்கள்  முழுமையாக விழுந்து காணப்படுகின்றன.  

எனவே 96 மணித்தியாலத்திற்கு பின்னரே குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்தி கூறமுடியும்