1956இல் வடக்­கையும் கிழக்­கையும் இணைத்­து­ ஒ­ரே­ மொ­ழியைத் திணித்­தனர். இப்­போ­து ­வ­ட­, கி­ழக்­கிலும் பௌத்­தத்தைத் திணிக்­க­ ந­ட­வ­டிக்­கை­கள்­ எ­டுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. எனவே இவ்­வி­டயம் ஊர் அறி­ய­ வேண்டும். உலகம் அறி­ய­வேண்டும். முக்­கி­ய­மா­க­ எ­ம­து­ மக்களுக்கான  தலை­வர்கள் அறி­ய­வேண்டும்.

நான் நாளை மறைந்­து­விட்­டாலும் நான் தொடக்­கி­யுள்­ள­ க­ருத்துப் பரி­மாற்றம் கட்­டா­ய­மா­க ­சிங்­க­ள­ மக்­க­ளைச்­ சிந்­திக்­கச்­செய்யும். இப்­பொ­ழு­தே­ ப­ல­ சிங்­கள இளம் ச­மு­தாயத் தம்­பி­மார்கள் உண்­மையைத் தேடத் தொடங்­கி­விட்­டார்கள் என்று தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ளரும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது குறித்து மேலும்  கூறி­யுள்­ள­தா­வது;

கேள்­வி-­:  நீங்கள் ஏன் இத்­த­ரு­ணத்தில், அதா­வ­து ­பு­திய ஜனா­தி­ப­தி­ ஒ­ருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்கும் வேளையில் மற்றும் புதி­ய­ பா­ரா­ளு­மன்றம் ஒன்­று ­ப­ரி­ண­மிக்­கப்­போகும் வேளையில், சிங்­க­ள­வர்கள் பற்­றியும் பௌத்தம் பற்­றியும் உங்கள் கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக வெளி­யிட்டு வரு­கின்­றீர்கள்? தெற்கில் உங்கள் மீது­ ப­லத்­த ­எ­திர்ப்­பு­ உ­ரு­வா­கி­வ­ரு­வ­தை ­நீங்கள் உண­ர­வில்­லையா?

பதில்:  -என்­னிடம் தெற்­கி­லி­ருந்து ஆங்­கி­லத்தில் ஒரு­ கேள்­வி­ கேட்­கப்­பட்­டது. அதற்குப் பதிலளித்தேன். அக் கேள்­வி­யா­னது முஸ்­லிம்­களும் மலை­யகத் தமி­ழர்­களும் மத்­திய அர­சாங்­கத்துடன் கைகோர்த்து ­முன்­செல்ல உடன்­படும் போது ஏன் வட­, கி­ழக்குத் தமி­ழர்கள் முரண்­டு­ பி­டிக்­கின்­றார்கள் என்­ற­வா­று­ அ­மைந்­தி­ருந்­தது.

என்­னு­டைய பதிலில் வட, ­கி­ழக்குத் தமிழ் மக்­களின் பாரம்­ப­ரியம் பற்­றியும் தனித்­துவம் பற்­றியும் விளக்­க ­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டது. அப்­போ­துதான் சிங்­கள மக்கள் தம் பாரம்­ப­ரியம் பற்­றி கொண்­டி­ருக்கும் தவ­றா­ன­ சிந்­த­னை­கள் ­பற்­றி­ க­ருத்துத் தெரி­விக்­க ­வேண்­டி­ய­ அ­வ­சி­யமும் ஏற்­பட்­டது.  பத்­து­ வ­ரு­டங்­க­ளுக்­கு மேல் ஒரு சட்­ட  ­ஆ­சி­ரி­ய­ராக இருந்­த நான் கேள்­விகள் கேட்­கப்­படும் போது ­அ­வற்­றுக்­கா­ன­ தக்­க­ ப­தில்கள் எவ்­வ­கை­யா­ன ­பின்­ வி­ளை­வு­களை­ ஏற்­ப­டுத்தும் என்­று­ உய்த்­து­ண­ர­ மு­டி­யா­த­ நி­லையில் இருக்­க­வில்லை. குறித்­த­ கேள்வி இந்­த­க் கா­ல­கட்­டத்தில் வெளி­யே­வ­ர­வேண்­டி­ய­ சி­ல­ வி­ட­யங்­க­ளை­ அம்­ப­லப்­ப­டுத்­த  ­உ­த­வி­யது. அந்தச் சந்­தர்ப்­பத்தை நான் நழு­வ­வி­ட­வில்லை.

இது­வ­ரையில் தனித்து நாங்கள் எங்கள் மத்­தியில் பேசி­வந்த சில ­வி­ட­யங்­க­ளை  நான் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளேன். நான் கண்ட உண்­மையை வஞ்­ச­க­மில்­லாமல் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளேன். நான் வெளிப்­ப­டுத்­தி­ய­ உண்­மைகள் நான் வாசித்­த­றிந்­த ­வி­ட­யங்கள் மட்­டு­மல்ல பல ­ச­ரித்­தி­ர­ ஆ­சி­ரி­யர்­க­ளு­ட­னா­ன­ க­ருத்துப் பரி­மாற்­றமும் அவ்­வுண்­மை­களை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தி­யுள்­ளன.

அவர்­கள்­ சி­ல­ரி­டம்” ஏன் இவற்­றை ­வெ­ளிப்­ப­டுத்­த நீங்கள் முன்­வ­ர­வில்லை என்று­ கேட்­ட ­போ­து”­அ­து ­எப்­ப­டி சேர்?” என்­று­ மட்டும் பதிலளித்­தார்கள்.

நாளை­ எ­னக்­கொ­ரு­பக்­க­ உ­த­வி­ வேண்டு­மென்­ற ­நி­லை­ வந்­து­விட்டால் இவர்கள் ஒரு­வ­ரேனும் என் சரித்­திரம் பற்­றி­ய­ க­ருத்­துக்­க­ளை­ ஆ­த­ரிக்­க­ முன்­வ­ரு­வார்­க­ளோ­ தெ­ரி­யாது! நான் செல்லும் பாதை ஆ­பத்­தா­ன­து­ என்­ப­து­ பு­ரி­கின்­றது.

பொது­வாக வட­மா­காண பாரா­ளு­மன்­ற ­உ­றுப்­பி­னர்­க­ளி­டமும் படித்­த­ பல்­து­றை­வல்­லு­நர்­க­ளி­டமும் ஒரு­ த­யக்­கத்­தை நான் அவ­தா­னித்­துள்ளேன். தம­து­ ம­ன­துக்குச் சரி­யென்­று­ பட்­ட­தை­ அ­வர்கள் வெளி­யிடத் தயங்­கு­வார்கள். தமக்குள் பேசிக்­கொள்­வார்கள். ஆனால் பிற இனத்தார் முன்­னி­லையில் அவற்­றை­ வெ­ளிப்­ப­டுத்­த­மாட்­டார்கள். இது முப்­ப­து­வ­ரு­ட­கா­ல­யுத்­தத்தின் பாதிப்­பாக இருக்­கலாம். எம­து­ க­ருத்­துக்­களை, எம­து­ உ­ணர்­வு­களைக் கட்­டுப்­ப­டுத்­தி நாம் பல ­வி­ட­யங்­க­ளைப் ­ப­கி­ரங்­க­மாகப் பேசத் தயங்­கு­கின்றோம் என்­றே நான் காண்­கின்றேன்.  இவ்­வா­றான சூழல் என்­னைப்­போன்­ற­வர்­களைப் பாதிக்­கா­த­தா­லோ ­என்­ன­வோ என் கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாகக் கூறக்­கூ­டி­ய­தா­க­ உள்­ளது. அன்­றுந்தான் இன்­றுந்தான் எனக்­கு­ உண்­மை­ என்­ப­து ­முக்­கி­ய­மா­னது. நீதி­ப­தி­யாக பல­வ­ருட­  காலம் கழித்­த­தா­லோ ­என்­ன­வோ”­எப்­பொருள் யார் யார் வாய் கேட்­பினும் அப்­பொருள் மெய் பொருள் காண்­ப­த­றி­வு”­என்­ற­ வள்­ளுவர் வாக்­கியம் மனதில் ஆழப்­ப­திந்­துள்­ளது.

ஒரு­ பக்கம் என­து­ வ­ய­து­ எ­னக்­கு­ ஒ­ரு­ பக்க­ப­ல­மாக இருக்­கின்­றது. மறு­பக்கம் என் இறை­ நம்­பிக்கை இன்­னொ­ரு­ பக்­க­ப­ல­மாக இருக்­கின்­றது. கொழும்புத் தமிழர் ஒருவர் நான் மலி­வான ஜன­ரஞ்­ச­கத்தைப் பெற  இவ்­வாறு கூறி­ய­தா­க­ த­ன­து­க­ருத்­தை­ வெ­ளி­யிட்­டுள்ளார் என்­று­ அ­றி­கின்றேன். மேலும் இனக் கல­வரம் ஒன்­று ­வெ­டிக்­கு­மோ­ என்­ற­க­வ­லை­ அ­வ­ருக்கு! சிங்­க­ள­ மக்­களின் எதிர்ப்பை ­சம்­பா­தித்துக் கொண்­டி­ருக்கும் நான் கொழும்பில் பிறந்­து­வ­ளர்ந்­தவன். அங்­கு ­சென்­று­வ­ர­ வேண்­டி­யவன். என­து­கு­டும்­பத்­தாரும் ஆத­னங்­களும் அங்­குதான் உண்டு. என் வாழ்க்­கை­யையும் என­து­ பா­து­காப்­பையும் மட்டும் நான் நினைத்­தி­ருந்­தால்­ இவ்­வா­றா­ன­ க­ருத்­துக்­க­ளை என்­னுள்­ளேயே பூட்டி வைத்­தி­ருப்பேன்.

மலி­வா­ன­ ஜ­ன­ரஞ்­ச­கத்­துக்­கா­க­ என்­னையே நான் தியாகம் செய்­ய­ வேண்­டி­ய­ அ­வ­சியம் எனக்­கில்லை. ஆனால் இவற்­றை­ எல்லாம் தெரிந்தும் என­து­ க­ருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக் ­வெளிக்கொண்­டு ­வந்­த­தற்­குக் ­கா­ரணம் உண்டு.

அதுதான் நீங்கள் கூறி­ய­ கா­ர­ணங்கள்.ஒன்­று­ பு­திய ஜனா­தி­பதி. மற்­றொன்­று ­வ­ரப்­போகும் புதி­ய­ பா­ரா­ளு­மன்றம். சென்ற ஜனா­தி­பதித் தேர்தல் ஒரு­வி­ட­யத்­தை ­பளிச்” செனத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. நாடு­ க­ருத்­துக்­களின் அடிப்­ப­டையில் துரு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மை­ தெ­ரி­கின்­றது.

சிங்­கள மக்­களின் சிந்­த­னைகள் வேறு தமிழ் ­மக்­களின் கருத்­துக்கள் வேறு  ­என்­ப­து­ பு­லப்­பட்­டுள்­ளது. புதிய ஜனா­தி­பதி அவர்கள் சிங்­க­ள ­பௌத்­தத்தை நிலை­நி­றுத்த முன்­வந்­துள்ளார். அதற்­கு ­சிங்­களப் பொது­மக்கள் பெரு­வா­ரி­யாக வாக்­க­ளித்­துள்­ளார்கள். அந்­த­ அ­டிப்­ப­டையில் வட,  கி­ழக்கு மாகா­ணங்­களில் பௌத்­த­ கோ­யில்கள், விகா­ரைகள், சின்­னங்கள் யாவும் விரைவில் நிமிர்ந்­தெழ இருக்­கின்­றன.

சரித்­திரம் தெரி­யா­த­ விஞ்­ஞா­ன­ அ­றிவு­ ப­டைத்­த­சிலர்” இது ஒரு­பௌத்­த­ நாடு”­என்றும்” பௌத்­தத்­திற்­கு­ மு­த­லிடம் கொடுப்­பதில் தமி­ழர்­க­ளுக்­கு ­ஆட்­சே­ப­னை­ இல்­லை”­ என்றும் கூறி­யுள்­ளார்கள்.

இது எந்­த­ அ­ள­வுக்­கு ­எம்மைப் பாதிக்­கப்­போ­கின்­ற­தென்று அவர்கள் சிந்­தித்­தார்­க­ளோ ­தெ­ரி­யாது.  பௌத்­த­ சின்­னங்­க­ளை­ வ­ட­, கி­ழக்­கில்­நி­று­வ­ சுமார் 500 கோடி (சரி­யா­ன­ தொ­கை­ எ­னக்கு­ நி­னை­வில்லை) பாதீட்டில் ஒதுக்­கி­ய­போ­து­ எ­ம­து­ தமிழ்த்  தலை­வர்கள் அது­பற்றித் தெரிந்தும் வாழா­தி­ருந்­தனர். காரணம் அவர்­க­ளுக்கு 300 கோடி­த­ரப்­போ­வ­தா­க­ அப்­போ­தை­ய­ பி­ர­த­ம­ மந்­தி­ரி­ அ­றி­வித்­தி­ருந்தார். இது தான் எம­து ­பி­ரச்­சனை. அர­சாங்­கத்துடன் ”சேர்ந்­து­போங்கள், சேர்ந்­து­போங்­கள்”­என்­று­ பலர் எமக்­கு­ அ­றி­வு­ரை­த­ரு­கின்­றார்கள். சேர்ந்­து­ போனால் அவர்கள் எம்­மை ­வாங்­கி­வி­டு­வார்கள் என்­பதை இவர்கள் உணர்­வ­தில்லை. 300 கோடி ­கி­டைக்­கின்­ற­ தென்­று­ அ­றிந்­த­வுடன் எம் தலை­வர்கள் வாய் ­பே­சா­ ம­டந்­தையர் ஆகி­விட்­டார்கள்.

 தற்­போ­து­ வ­ட­, கி­ழக்கில் புத்­த­ச­ம­ய ­சின்­னங்கள் விரை­வா­க­வந்­து­ கொண்­டி­ருக்­கின்­றன. அவற்றைத் தடுக்­க­ மு­டி­யாமல் இருக்­கின்­றார்கள். எங்கள் தமிழ்த் தலை­வர்கள் என்று கூறப்­ப­டு­ப­வர்கள். பொரு­ளா­தா­ர­வி­ருத்­தி­ என்­று­ அ­ர­சாங்கம் கூறும் போதும் நாங்கள் ஒன்­றை­ ம­னதில் வைத்­தி­ருக்­க ­வேண்டும். உங்­க­ளுக்­கு­ ஆ­லை­களைத் தந்­து­ ஆ­தா­யங்­க­ளை­ மத்­து­ருட்­டி­விடும். இப்­பொ­ழு­தே­ எ­ம­து­ வ­ளங்கள் சூறை­யாடப்பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. எம்மால் தடுக்­க­மு­டி­யாமல் இருக்­கின்றோம். இரா­ணு­வத்­தை­ வைத்துக் கொண்­டு­ பொ­ரு­ளா­தா­ர­வி­ருத்­தி ­செய்தால் என்­ன­ந­டக்கும் என்­று­ எம்­மவர் சிந்­திக்­கின்­றார்கள் இல்லை. இன்­றைய ஜனா­தி­ப­தியின் ஆட்­சியின் கீழ் இரா­ணு­வத்­தினர் அர­சாங்­கத்தின் செல்­லப்­பிள்­ளைகள் ஆகி­விட்­டார்கள். இனி­அ­ர­சாங்கம் செய்­ய­வி­ருப்­ப­தை­ மக்கள் தடுப்­பார்­க­ளா­ என்­ற­ சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன ஒரு சூழ­லில்த்தான் நான் இந்நாட்டின் சரித்­திரம் பற்­றி­ய­உண்­மை­களை வெளிக்­கொண்­டு­வ­ர­ அ­வ­சியம் ஏற்­பட்­டது. சிங்­க­ள ­பௌத்­தர்கள் பல­ருக்­கு­ முக்­கி­ய­மா­க­ பௌத்­த­பிக்­கு­களில் பல­ருக்­கு­உண்­மை­வ­ர­லா­று­தெ­ரியும். ஆனால் அவற்றை வெளி­வ­ர­வி­டாது இது­வரை சிங்­கள மக்­களை அறி­யா­மையில் உழ­ல­வைத்து உசுப்­பேத்­தி­ வந்­துள்­ளார்கள். தமிழ் மக்­க­ளை ­வெ­ளி­யேற்றி இந்­த­நா­டு ­சிங்­க­ள­ பௌத்­த­ நா­டு­ என்­று­ பி­ர­க­ட­னப்­ப­டுத்­த ­அ­வர்கள் காத்திருக்கின்றார்கள். குறுகிய நலன் கருதி எம்மவரும் ”இது சிங்கள பௌத்தநாடு”என்றே கூறத்தலைப் பட்டுள் ளனர். வணக்கத்திற்குரிய கர்தினால் மெல் கம் இரஞ்சித் ஆண்டகைஅடிப்படைதெரியாதுஅரற்றுகின்றாராஅல்லது அடிவாங் கப் பயப்பட்டு”இது ஒருபௌத்தநாடு”என்கிறாராதெரியவில்லை.

ஆனால் உண்மை அதுவன்று.

வடக்குகிழக்கு தவிர்ந்த பகுதிகளை வேண்டுமானால் சிங்கள பௌத்த நாடு என்று கூறலாம். வடக்குகிழக்குபகுதிகளில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். அவர்கள் என்றென்றும் வடக்குகிழக்கில் பெரும்பான்மையினராக இருந்து வந் துள்ளனர். எம்மக்கள் கிறிஸ்தவம், இஸ் லாம், சைவம் போன்ற மதங்களையே சார்ந்தவர்கள். பௌத்தத்திற்குச் சென்ற எமது ஆதித்தமிழ் மக்கள் கூட பௌத்தம் வேண்டாம் என்றுதிரும்பவும் சைவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேவடக்குகிழக்கை”சிங்களபௌத்த”அடைமொழிக்குள் கொண்டுவரமுடியாது.

இதைஉணர்த்தவேநான் உண்மைகளை வெளியே கொண்டுவருகின்றேன். 1956 இல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரேமொழியைத் திணித்தனர். இப் போது வடகிழக்கிலும் பௌத்தத்தைத் திணிக்க நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகின்றன.

எனவே இவ்விடயம் ஊர் அறியவேண் டும். உலகம் அறியவேண்டும். முக்கியமாக எமதுமக்கள் தலைவர்கள் அறியவேண்டும்.

நான் நாளை மறைந்துவிட்டாலும் நான் தொடக்கியுள்ளகருத்துப் பரிமாற்றம் கட்டாயமாக சிங்கள மக்களை சிந்திக் கச் செய்யும். இப்பொழுதே பல சிங் கள இளஞ்சமுதாயத் தம்பி மார்கள் உண் மையைத் தேடத் தொடங்கி விட்டார்கள். ஆகவே தெற்கில் என் மீதுபரவலான எதிர்ப்பு எழுந்துள்ளதை அறிவேன். உண்மை கசக்கும் என்பதற்கு அது எடுத்துக் காட்டு.