மஹிந்த அரசாங்கம் நாட்டை கடன் குகைக்குள் தள்ளியது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதே கடன் குகைக்குள் எமது நாட்டை மேலும் இறுகச் செய்துள்ளது. இவ்விரு அரசாங்களுமே மக்கள் மீது அதிக சுமையை சுமத்துகின்றன.

எனவே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரனையை முழு அரசாங்கத்திற்கும் எதிரான பிரேரனையாக கருதி மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியில் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.