இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி, பலர் பாதிப்பு

By R. Kalaichelvan

02 Jan, 2020 | 10:28 AM
image

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து அந்நாட்டில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளன.

அத்தோடு ஜகார்த்தா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டதோடு  சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right