அரசாங்க பாடசாலைகளுக்கான 2020ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த இரு தினங்களில் பாடசாலை சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பாடசாலையை ஆரம்பிப்பதற்கான சுற்றாடல் ஏற்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம.எம்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாடப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர், கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கான பாதணிக்கான வவுச்சர் போன்றன புதிய தவணையின் ஆரம்பப் பகுதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது இதற்கான ஆலோசனைகள் கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் ஆர்.எம.எம்.ரட்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.