(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இயங்காமல் இருந்த நிலையில், இன்று புத்தாண்டுடன் மீள தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. 

அரசின் உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்டள்ள ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசுத்த விஷேட உத்தரவுக்கு அமைய  பொலிஸ் ஊடகப் பிரிவு தனது பணிகளை இவ்வாறு ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன. 

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இடமாற்றங்களில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரின் கீழேயே இன்று முதல் அந்த பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும் பொலிஸ் திணைக்களத்துக்கு என ஒரு ஊடகப் பேச்சாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.