30 மில்லியன் கொள்ளையுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கட்டிட நிர்மானத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் உள்நாட்டு சிகரட்டுகள் போன்றவற்றை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றினை கொள்ளையிட்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளை  வேனில் வந்த குறித்த சந்தேக நபர்கள் நரம்மல கல்வங்குவ பகுதியில் வைத்து லொறியின் சாரதி மற்றும் உதவியாளரை தாக்கிவிட்டு லொறியை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியின் உரிமையாளர் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்கள் வெயாங்கொடை, கம்பஹா மற்றும் பொல்கசோவிட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.