நிறைவேற்று அதிகாரத்தையும் அமைச்சரவை அதிகாரத்தையும் கொண்டு நாட்டு மக்களுக்க முழுமையான சேவையினை தொடர்ந்து முன்னெடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய வருடம் பல எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளன.  நாட்டை  அபிவிருத்தியடைய செய்து முன்னேற்றமடைய வேண்டும்.  ஜனாதிபதி தேர்தல் காலத்தில்  மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள்  கொண்டுள்ள  எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும்.

பரீட்டையில் தோல்வியடைந்த மாணவர்கள்  ஒரு தொழிலை பெற்றுக் கொள்வத கடினமான விடயமாக காணப்படுகின்றன.     அனைவருக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் 10000 தொழில்வாய்ப்பினை வழற்குவதின் ஊடாக  முதற்கட்டமாக நிறைவேற்றப்படும். வெகுவிரைவில் தொழில் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.