சேராக்குளி பகுதியில் நேற்று அதிகாலை 5. மணியளவில்  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் காணாமல் போனதையடுத்து உறவினர்களால் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் பின்னர் கடற்படையினர், பொலிசார், கிராம மக்கள் இனைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் நேற்று அதிகாலை 5. மணியளவில் காணாமல் போனவரின் இயந்திரப் படகு நேற்று இரவு மணல்தீவு பகுதியில் கரையொதிங்கியுள்ளது.

 இதனையடுத்து குறித்த நபரை தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டவேளையில் மணல்தீவு கடற்பகுதியிலேயே இன்று பகல் 2 மணியளவில் கடலில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேராக்குளியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான லூஷன் புலத்சிங்ஹ என்ற 43 வயதுடையவராவார்.

இதையடுத்து குறித்த  சடலம் மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.