முப்படைகளின் பதில் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாகவே முப்படைகளின் பதில் பிரதானியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர குணவர்தன இன்றுடன் ஓய்வுபெறுகின்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.