logo

ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புட்டின்

Published By: Daya

31 Dec, 2019 | 03:18 PM
image

ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளில் புட்டின் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

1999ஆம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புட்டின் பணியாற்றினார். 1999ஆம் ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி  போரிஸ் எல்ட்சின், பொறுப்பு பிரதமராக புட்டினை நியமனம் செய்தார்.

அதன்பின் ஜனாதிபதி பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி ராஜினாமா செய்தார். அப்போது பொறுப்பு ஜனாதிபதியாக  விளாடிமிர் புட்டினை நியமித்தார்.

அப்போது கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளி தாக்குதலை புட்டின் நடத்தியமையால் ரஷ்ய மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.

அன்றுமுதல் புட்டின் ரஷ்யாவில் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் புட்டின் அபாரவெற்றி பெற்றார். அவர் 2022ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார். ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புட்டின் இன்று தனது அரசியல் பயணத்தின் 21ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

புட்டின்  20 ஆண்டுகளாக  ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளில் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

புட்டின் மீது பல்வேறு சர்சைகள் கூறப்பட்டாலும் அவர் ரஷ்யாவில் சக்தி வாய்ந்த தலைவராகவே இருந்து வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28
news-image

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து...

2023-06-09 06:14:31
news-image

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22...

2023-06-08 20:25:24
news-image

இந்தியா - இலங்கைக்கிடையிலான கப்பல் போக்குவரத்து...

2023-06-08 19:57:05
news-image

சத்திரசிகிச்சையின் பின் சிறந்த நிலையில் பாப்பரசர்:...

2023-06-08 17:18:43