காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிகாரிகளுக்கு ஆலோசனை

Published By: R. Kalaichelvan

31 Dec, 2019 | 02:58 PM
image

காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் மற்றும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி,  பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : 

அதன் அடிப்படையில் குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய முனையமொன்றை அமைக்கும் பொருட்டு  அமைச்சரால் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முனையத்திற்கு 300 ,  400 தொன் நிறைக் கொண்ட கப்பல்களே வருகைத்தருகின்றன. பெரும் கொள்ளலவைக் கொண்ட கப்பல்களை துறைமுகத்திற்குள் ஈர்க்கும் பொருட்டு புதிய முனையமொன்றை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். 

இப்புதிய முனையத்தின் ஆழம் 07 மீட்டர்களாகும். இந்நடவடிக்கையூடாக துறைமுகத்தின் செயற்பாடுகளை அபிவிருத்திச் செய்ய ,அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. பழைய முனையத்தை சீர்செய்தல் , புதிய ஆழமான ஜெட்டியொன்றை நிர்மாணித்தல் , அலைதாங்கியை விஸ்தரித்தல்  ஆகிய துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் விரிவாக்கல் செயற்பாடுகளின் பொருட்டு காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டின் முதலாம் கட்டமாக 15 ஏக்கர் காணியும்  , இரண்டாம் கட்டமாக 35 ஏக்கர் காணியும் கையகப்படுத்தப்படவுள்ளது. இவ்வனைத்து செயற்பாடுகளையும் துரித கதியில் முன்னெடுக்குமாறு அமைச்சர் மேலும் கூறினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றல் மற்றும் யுத்தத்தின் பொழுது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51