மான்ஸ்டர் என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பொம்மை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் 60 வயது மாநிறம், காற்றின் மொழி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன், இந்த ஆண்டில் இயக்கி வரும் திரைப்படம் ‘பொம்மை’. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக முன்னணி இளம் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பொம்மை ஒன்றுடன் சூர்யா கைகோர்த்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எஸ். ஜே. சூர்யா தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்திலும், இறவாகாலம், உயர்ந்த மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.