நீரிழிவின் அளவைக் கண்டறிய உயிர் உணரிகள் பொருத்தப்பட்ட கண்ணாடிகள்

31 Dec, 2019 | 01:58 PM
image

நீரிழிவு என்பது ஒரு உடல் அனுசேப மாற்ற நிலை காரணமாகத் தோன்றும் விளைவாகும்.  இது உலகளவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அண்மைய தரவுகளின் படி உலகளவில் 380 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, சமீபகாலங்களில் நீரிழிவு ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகின்றது. இது 2035 ஆம் ஆண்டில் 580 மில்லியன் மக்களை பாதிக்கலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.


நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக கொண்டு செல்லக்கூடிய கிளைகோசோமீற்றரைப் பயன்படுத்தி இரத்த குளுக்கோஸ் அளவை அளவிடுகின்றனர்.  விரல் நுனியில் ஊசியால் குத்தி இரத்த மாதிரியைப் பெறுவார்கள். இந்த செயல்முறை, ஒரு நாளைக்கு பலமுறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டி ஏற்படலாம்.  இது வேதனையளிக்கும் மற்றும் தொற்றுநோய்க்கான அபாயத்தைக் கொண்டுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவை அறிய அதிக ஆக்கிரமிப்பு அற்ற, வலி குறைவான முறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

வாய்க்குழியில் உள்ள உமிழ்நீரின் தன்மையிலிருந்து அதனை பரிசோதிப்பதன் மூலம் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவை கணித்தல் என பல்வேறு பன்முக மருத்துவ பரிசோதனைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். தற்போது பிரேஸில் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்ணீரில் இருந்து குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவை கணிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். இம்முறை துல்லியமான,  செலவு குறைவான முறையாக கூறப்படுகின்றது.


"கண்ணீரில் உள்ள பல்வேறு அனுசேப மாற்றக் கூறுகளின் செறிவுகள் சம காலத்தில் காணப்படும் ஒருவரின் இரத்த அளவை பிரதிபலிக்கின்றன."


பிரேஸிலிய விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட இந்த உயிர் உணரி  ‘குளுக்கோஸ் ஒக்சிடேசு’ எனப்படும் ஒரு நொதியத்தை அடையாளம் காணக்கூடியது. இதன் வாயிலாக உடல் திரவங்களில் காணப்படும் சுயாதீன குளுக்கோஸைக் கண்டறிய முடிகிறது. இத்தகைய முறை மூலம் குருதி குளுக்கோஸ் மட்டுமன்றி விற்றமின் மற்றும் அல்கஹோல் என்பவற்றையும் அளவிட முடியும்.சாவோ போலோ பல்கலைக்கழகத்தின் சாவோ கார்லோஸ் இயற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், சான் டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நனோ பொறியியல் துறையின் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, ஒரு மின்வாயை நொதியத்துடன் இணைத்து உருவாகும் இலத்திரன்களின் நிலையான ஓட்டத்தை ஒரு சுற்றுடன் இணைத்து, கண்ணீர் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் கண்ணீரின் குளுக்கோஸ் செறிவுக்கு ஏற்ப செயற்படும் வகையில் கண்ணாடிகளின் மூக்கு திண்டு மீது இந்த சாதனத்தை நிறுவினர்.


இந்த உயிர் உணரிகள் உயிரியல் அல்லது வேதியியல் எதிர்வினைகளைக் கூட அளவிட பயன்படுத்தப்படும்.  இது  குறிப்பிட்ட வேதிப்பொருளின் செறிவுக்கேற்ற விகிதாசாரத்தில் ஒரு சமிக்ஞையை உருவாக்கக் கூடியது.  கண்ணீர் குளுக்கோஸ் ஒக்சிடேசுடன் தொடர்பு கொள்ளும்போது, இது இலத்திரன்களின் ஓட்டத்தை மாற்றி, கண்ணாடிகளின் கையில் நிறுவப்பட்ட சாதனத்தால் பதிவு செய்யப்பட்டு செயலாக்கப்படும் ஒரு சமிக்ஞையை உருவாக்குகிறது.  இது முடிவுகளை ஒரு கணினி அல்லது ஸ்மார்ட்போனுக்கு சமநேரத்தில் அனுப்புகிறது.


அதே அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், சாவோ போலோ வேதியியல் நிறுவனத்தின்  ஆராய்ச்சியாளர்கள் குழு, புறக்கணிக்கப்பட்ட நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய் போன்ற நாட்பட்ட  நோய்களின் மருத்துவ ஆய்வுக்கு உயிர்க்குறிகாட்டிப் புரதங்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய ஒரு உயிர் உணர்வை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த எளிய அணுகுமுறை மருத்துவ நிபுணர்களால் அல்லது செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் உதவியுடன் வீட்டிலேயே நோயாளிகளால் நோய்களைக் கண்டறிவதை மேம்படுத்த மிகவும் பயன்படுத்தப்படும்.


- சஞ்சீவி சிவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36