உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; காத்தான்குடியில் கைதான 63 பேரில் இருவருக்குப் பிணை

Published By: R. Kalaichelvan

31 Dec, 2019 | 12:01 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தெளஹித் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட 63 பேரில் இருவர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 61 பேரையும் எதிர்வரும் தை மாதம் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சஹ்ரானின் தந்தையிடம் வாகனம் வழங்கியதாக கைதுசெய்யப்பட்ட இருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் உள்ள தேசிய தெளஹித் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை ஆஜர்படுத்தியபோது பிணை வழங்கப்பட்டவர்களைத் தவிர ஏனையவர்களை எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி வரைய விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவினை பிறப்பித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51