டெங்கு நோயாளர்களுக்காக வைத்தியசாலைகள் அனைத்திலும் தனியான வைத்தியரை நியமிக்க தீர்மானம்

Published By: J.G.Stephan

31 Dec, 2019 | 11:38 AM
image

நாட்டில் பல பகுதிகளிலும், டெங்கு நோய் பரவி வருவதால், டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைக்காக இயந்திரம் வழங்குவதற்கும் அதற்காக தனியான வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து , டெங்கு நோய் பெருமளவில் காணப்படும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்பொழுது இவ்வாறான இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். நோயாளி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக நோயாளியின் முழுமையான இரத்தப் பரிசோதனை ( Full Blood Count ) மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரும்பாலான வைத்தியசாலைகளில் இதற்கான வசதிகள் இல்லை. இதனால் நோயாளர்களின் பாதுகாவலர்கள் வெளி இடங்களில் உள்ள இரசாயன கூடங்களில் பெருந்தொகை பணத்தை செலுத்தி இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அனைத்து பிரதான வைத்திய சாலைகளுக்கும் இந்த இயந்திரத்தை வழங்கவுள்ளது. 20 நிமிடத்தில் இதன்மூலம் பரிசோதனை தொடர்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46