கனடாவில் தொடரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து அந்நாட்டில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் சுமார் 100 க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்தோடு அந்நாட்டின்  றொரென்டோ மற்றும் கியூபெக்கில் அதிகளவிலான விமானங்களை உடனடியாக தரை இறக்கியுள்ளதோடு , குறித்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு பிரிவினர் மற்றும் குறித்த பகுதிக்கான மின் விநியோக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மாண்ட்ரீஸ் - ட்ரூடோட சர்வதேச விமான நிலையத்தில் 63 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு , 24 விமானங்கள் ஒட்டாவா மெக்டொனால்ட் கார்டியர் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.