வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கான சாவு மணி என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
இறுதிப் போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உறவினர்களை வட்டுவாகல் பகுதியிலும் ஓமந்தை சோதனை சாவடியிலும் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தனர். அவர்களை விசாரணை செய்து உங்களுடனே அனுப்புவதாக ஒலி பெருக்கியில் இராணுவம் அறிவித்தமைக்கு அமைவாக மக்கள் தங்களின் உறவினர்களை கையளித்தனர். ஆனால் இன்றுவரை அவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் தெரியாமல் அலைந்து திரிகின்றனர் உறவுகள்.
தங்களின் பிள்ளைகள்,கணவன்,பெற்றோர் என உறவுகளை தொலைத்து வருடக் கணக்கில் மக்கள் வீதிகளில் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.இவ்வாறு இருக்க நேற்று (30) வவுனியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மீது பேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அராஐகம் ஐனநாயகத்தின் மீது விழுந்த சாவு மணி ஆகும்.இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் கூட்டமைப்பு தலைவர்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோசங்கள் ,உருவப்பட எரிப்புக்கள் நடந்தன ஆனால் எந்த விதமான வன்முறைகளையும் அவர்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கவில்லைஃ
அதனை சகித்துக் கொண்டுதான் மக்களுக்காக குரல் கொடுக்கின்றனர். ஆகவே வவுனியாவில் நடைபெற்ற தாக்குதல் மீண்டும் அராஐகம் ஆரம்பித்தமையை வெளிப்படுத்தியுள்ளது.இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM