ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளைஞன் கைது!

By R. Kalaichelvan

31 Dec, 2019 | 10:26 AM
image

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை பஸ்ஸில் கடத்த முயன்ற இளைஞனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் சோதனைச் சாவடியில் வைத்தே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனியார் பஸ்ஸில் ஒரு கிலோகிராம் நிறையுடைய ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டபோதே குறித்த 24 வயதுடைய இளைஞர் கதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right