சூடானில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போரட்டம் நடத்திய ஆசிரியரை கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 29 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

வட,கிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆரப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியரான அகமது அல் காய்ர் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைகளுக்குட்படுத்தி கொலை செய்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்தன.

அத்தோடு போராட்டத்தின் எதிரொலியாக அந்நாட்டு ஜனாதிபதி  அல் பஷீர் பதிவியல் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் , மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தம்வசப்படுத்தியது.

அத்தோடு நடைபெற்ற ஆரப்பாட்டத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் தனி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையிலேயே அந்நாட்டின் ஆசிரியரான அல் காய்ர் மரணம் தொடர்பான விசாரணைகளில் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் 29 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.