இலஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் ஆறு பேரை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலக வளாகத்தில் (RMV) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாரதி அனுமதிப் பத்திரைத்தை குறுகிய காலப் பகுதிக்குள் பெற்றுத் தருவதாக உறுதியளித்து பயனாளிகளிடம் ஒரு தொகை பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்ச்சாட்டிற்கமைவாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இதுபோன்ற பிற தரகர்கள் தொடர்பான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் கைதான சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கையும் மேற்கொண்டிருந்தனர்.