இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு மூன்றிற்கான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு வவுனியா “பிரண்ட்ஸ்” விளையாட்டு கழகம் தகுதி பெற்றுள்ளது.வடமாகாண ரீதியாக இடம்பெற்று வரும் குறித்த சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் வவுனியா பிரண்ட்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து முல்லைத்தீவு பி.சி.சி அணி மோதியிருந்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பிரண்ஸ் அணியினர் ஜம்பது பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 260 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அணி சார்பாகச் சாந்தன் -64,கயான் -50,தினேஷ் -38,ஓட்டங்களை எடுத்தனர்.பி. சி.சி அணிசார்பில் பந்து வீச்சில்வி, ஜிதரன் -03, அஞ்ஜியன்-03இலக்குகளைக் கைப்பற்றியிருந்தனர்.261 என்ற வெற்றி இலக்கை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு அணி 199 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து இலக்குகளையும் இழந்து தோல்வியடைந்திருந்தது. அந்த அணிசார்பாக  தினேஷ் -59,சஜிந்தன் -42 ஒட்டங்களையும் பெற்றனர் பந்து வீச்சில் சுபாஷ் -04, தினேஷ் -03, சுரேந்திரன் 02 இலக்குகளை வீழ்த்தினர்.
வெற்றியீட்டிய வவுனியா பிரண்ட்ஸ் அணியினர் தம்புள்ளை ரங்கிரிய சர்வதேச விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.