கொழும்பு - கண்டி  பிரதான வீதியின் வறக்காப்பொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய, பலபன மற்றும் கொஸ்கம பகுதியைச் சேர்ந்த விமானப் படைவீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.