புதிய ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து தமக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதாக வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா F.M.E ஊடகக்கல்லூரியில் இன்று  இடம்பெற்றது.

பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ந.வினோதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வேலையற்ற பட்டதாரிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆரயப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் மாதமளவில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராயபக்ஷவை சந்தித்து தமது வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஜம்பதிற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.