கடந்த 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ரோகித் சர்மாவும், ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை சாய்த்த வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் லசித் மலிங்கவும் பெற்றுள்ளனர்.

2009 - 2019 வரையான ஒருநாள் கிரிக்கெட் காலப் பகுதி

1. ரோகித் சர்மா (இந்தியா) 

போட்டிகள் -180, ஓட்டங்கள் - 8249, சராசரி - 53.56. கூடிய ஓட்ட எண்ணிக்கை - 264, சதங்கள் - 28, அரை சதம் - 39

2. அஸிம் அம்லா (தென்னாபிரக்கா)

போட்டிகள் - 159, ஓட்டங்கள் - 7265, சராசரி - 49.76, கூடிய ஓட்ட எண்ணிக்கை - 159, சதங்கள் - 26, அரைசதம் - 33

3. விராட் கோலி (இந்தியா)

போட்டிகள் - 227, ஓட்டங்கள் - 11125, சராசரி 60.79, கூடிய ஓட்ட எண்ணிக்கை - 183, சதங்கள் - 42, அரை சதங்கள் 52

4. ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

போட்டிகள் - 135, ஓட்டங்கள் - 6485, சராசரி - 64.20, கூடிய ஓட்டம் - 176, சதங்கள் - 21, அரைசதம் - 33

5. சஹிப் அல் ஹசன் (பங்களாதேஷ்)

போட்டிகள் 131 - ஓட்டங்கள் - 4276, சராசரி 38.87, கூடிய ஓட்டம் 124, சதங்கள் - 05, அரைசதம் -35

விக்கெட்டுகள் - 177, சராசரி 30.15, 5 விக்கெட்டுகள் : 2, சிறந்த பந்து வீச்சு - 29-5

6. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

போட்டிகள் - 142, ஓட்டங்கள் 3843, சராசரி 40.88, கூடிய ஓட்டம் - 150, சதங்கள் - 09, அரைசதம் - 20

7. எம்.எஸ். தோனி (இந்தியா)

போட்டிகள் - 196, ஓட்டங்கள் 5640, சராசரி 50.35, கூடிய ஒட்டம் - 139, சதங்கள் - 4, அரைசதம் 39

8. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)

போட்டிகள் - 71, விக்கெட்டுக்கள் - 133, சராசரி 18.54, 5 விக்கெட்டுகள் : 4, சிறந்த பந்து வீச்சு - 18-7

9. மிட்செல் ஸ்டாக் (அவுஸ்திரேலியா)

போட்டிகள் - 85, விக்கெட்டுகள் - 172, சராசரி - 20.99, 5 விக்கெட்டுகள் : 7, சிறந்த பந்து வீச்சு 28-6

10. டிரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து)

போட்டிகள் - 89, விக்கெட்டுகள் - 164, சராசரி 25.06,  5 விக்கெட்டுகள் : 5, சிறந்த பந்து வீச்சு 34-7

11. லசித் மலிங்க (இலங்கை)

போட்டிகள் - 162, விக்கெட்டுகள் - 248, சராசரி - 28.74, 5 விக்கெட்டுகள் : 8, சிறந்த பந்து வீச்சு - 38 - 6

2009 - 2019 வரையான டெஸ்ட் கிரிக்கெட் காலப் பகுதி

1. அலெஸ்டர் குக் (இங்கிலாந்து)

போட்டிகள் - 111, ஓட்டங்கள் - 8818, சராசரி 46.41, கூடிய ஓட்டம் - 294, சதங்கள் - 23, அரைசதம் - 37

2. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா)

போட்டிகள் - 82, ஓட்டங்கள் - 7009, சராசரி - 48.33, கூடிய ஓட்டம் - 335, சதங்கள் - 23, அரைசதம் - 30

3. கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)

போட்டிகள் - 77, ஓட்டங்கள் - 6370, சராசரி - 52.21, கூடிய ஓட்டம் - 242, சதங்கள் - 21, அரைசதம் - 31.

4. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)

போட்டிகள் - 71, ஓட்டங்கள் - 7702, சராசரி 63.14, அதிகூடிய ஓட்டம் - 239, சதங்கள் - 26, அரைசதம் - 27.

5. விராட் கோலி (இந்தியா)

போட்டிகள் - 84, ஓட்டங்கள் - 7202, சராசரி - 54.97, கூடிய ஓட்டம் - 254, சதங்கள் - 27, அரைசதம் - 22

6. ஏ.பி.டி. வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

போட்டிகள் - 60, ஓட்டங்கள் - 5059, சராசரி - 57.48, கூடிய ஓட்டம் - 278, சதங்கள் - 13, அரைசதம் - 27

7. பென்ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

போட்டிகள் - 59, ஓட்டங்கள் - 3738, சராசரி 35.94, கூடிய ஓட்டம் - 258, சதங்கள் - 08, அரைசதம் - 20.

விக்கெட்டுக்கள் - 137, சராசரி - 33.45, 5 விக்கெட்டுகள் :4, சிறந்த பந்து வீச்சு - 22-6

8. டெல் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா)

போட்டிகள் - 59, விக்கெட்டுகள் - 267, சராசரி 22.29, 5 விக்கெட்டுகள் : 15, சிறந்த பந்து வீச்சு 51-7

09. ஸ்டூவர்ட் புரோட் ( இங்கிலாந்து)

போட்டிகள் - 110, விக்கெட்டுகள் - 398, சராசரி - 27.75, 5 விக்கெட்டுகள் - 14, சிறந்த பந்து வீச்சு - 15-8

09. நெதலன் லியோன் (அவுஸ்திரேலியா)

போட்டிகள் - 94, விக்கெட்டுகள் - 376, சராசரி - 32.14, 5 விக்கெட்டுகள் : 16, சிறந்த பந்து வீச்சு - 50-8

10. ஜிம்மி அண்டர்சன் (இங்கிலாந்து)

போட்டிகள் - 105, விக்கெட்டுகள் - 427, சராசரி - 24.19, 5 விக்கெட்டுகள் : 20, சிறந்த பந்து வீச்சு 42-7

- ஜெ.அனோஜன்-