இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய நாடு பூராகவும் உள்ள அனைத்து கடற்கரை பிரதேசங்களையும் தூய்மை படுத்தும் நிகழ்ச்சியில் இராணுவத்தினர்  ஈடுபட்டனர்.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில்  வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர்  ஈடுபட்டனர்.

குறிப்பாக கல்முனை பிராந்திய விஜயபாகு படைப்பிரிவினர்  அக்கரைப்பற்று நிந்தவூர் கோமாரி பனங்காடு பொத்துவில் நிலைகொண்டுள்ள இராணுவ பிரிவு அணிகள்   இன்றும்  நேற்றும்  காலை 7.30 மணியளவில்  பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் கடற்கரை பிரதேசத்தினை தூய்மை படுத்தி மக்கள் பாவனைக்கு கொடுபதற்கான நடவடிக்கையாக இந்த தூய்மை படுத்தும் திட்டம் அமைந்திருந்தது.  குப்பைகளை அகற்றி தூய்மை படுதும்   நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர்  ஈடுபட்டனர்.