பொதுத்தேர்தலுக்கு முன் ரணில் அரசியலிலிருந்து ஓய்வு -அல­வத்­து­வல விசேட செவ்­வி­

30 Dec, 2019 | 04:46 PM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தற்­போ­தைய தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொதுத்­தேர்­த­லுக்கு முன்­ன­தாக அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெற­வுள்­ள­தோடு புதிய தலை­மையை சஜித்­ பி­ரே­ம­தாஸ ஏற்­க­வுள்ளார். அவ­ரு­டைய தலை­மையின் கீழேயே ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான வலு­வான கூட்­டணி பொதுத் ­தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்கும் என்று அக்­கட்­சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜே.சீ.அல­வத்­து­வல வீர­கே­சரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­ல் தெரி­வித்தார்.

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,


கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஐக்­கி­யத்­தி­னையும் தேசி­யத்­தி­னையும் ஒருங்கே கொண்­டி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியில் அந்த விட­யங்கள் சீர்­கு­லைந்­துள்­ளதே?
பதில்:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது இந்த நாட்­டி­லுள்ள சிங்­கள, தமிழ், முஸ்லிம் உள்­ளிட்ட அனைத்து இன மக்­களின் பங்­க­ளிப்­பினால் உரு­வாக்­கப்­பட்டு வளர்க்­கப்­பட்ட கட்­சி­யாகும். தற்­போதும் அதே­பா­தையில் தான் எமது கட்­சி­யா­னது உள்­ளது. அர­சி­யலில் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­காக அடிப்­ப­டை­வா­தங்­க­ளையோ இனங்­க­ளுக்­கி­டையில் பேதங்­க­ளையோ நாம் உரு­வாக்­கி­யது கிடை­யாது. எதிர்­கா­லத்­திலும் உரு­வாக்­கப்­போ­வ­தில்லை.
ஆனால் பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் எமக்கு எதி­ராக பல்­வேறு பொய்­யான பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. நாங்கள் நாட்டின் மீதும் பௌத்த சம­யத்தின் மீதும் பற்­றற்­ற­வர்கள் என்று சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருந்தோம். இவ்­வாறு பல விட­யங்கள் இடம்­பெற்ற நிலையில் தான் நாம் தேர்­தலில் பின்­ன­டை­வு­களைச் சந்­தி த்­தி­ருக்­கின்றோம். அதன் பின்னர் அந்தப் பின்­ன­டை­வுகள் தொடர்பில் ஆராய்ந்து கொண்டு அடுத்த கட்டம் நோக்கி கட்­சியை மறு­சீ­ர­மைத்து முன்­னோக்கி கொண்டு செல்­வ­தற்கே முனைந்து வரு­கின்றோம்.
அவ்­வா­றான நிலையில் கட்­சிக்குள் சில­மா­று­பட்ட நிலைப்­பா­டுகள், கருத்­து­ரு­வாக்­கங்கள் உள்­ளன. அதனால் கட்சி பிள­வ­டைந்து விட்­டது என்றோ ஒற்­றுமை இல்­லை­யென்றோ கரு­தி­விட முடி­யாது. பாரம்­ப­ரியக் கட்­சி­யாக இருக்கும் எமது கட்­சி­யினுள் ஜன­நாயகக் குணாம்­சங்கள் மதிக்­கப்­ப­டு­கின்­றன. அதன்­ப­டியே தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே விரைவில் நாம் இறுதி முடி­வு­களை எடுக்­க­வுள்ளோம்.

கேள்வி:- நீங்கள் கட்­சிக்குள் முரண்­பா­டுகள் இல்­லை­யென்று கூறி­னாலும் கட்­சியின் தலை­மைத்­துவம் தொடர்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் இடையில் முரண்­பா­டுகள் இருப்­பது மட்­டு­மன்றி இரு அணி­க­ளா­கவும் உறுப்­பி­னர்கள் உள்­ள­ன­ரல்­லவா?
பதில்:- முரண்­பா­டுகள் உள்­ள­தாக கூற­மு­டி­யாது. தற்­போ­தைய சூழலில் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் கோரிக்கைக்கு அமை­வாக சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் அடுத்த பொதுத்­தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக அவரைக் கள­மி­றக்­கு­வ­தற்கும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் தற்­போ­தைய கட்­சித்­த­லை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சி­யலிலிருந்து ஓய்வு பெறப்­போ­வ­தா­கவும், தலை­மைப்­பொ­றுப்­பினை சஜித் பிரே­ம­தா­ஸ­வி­டத்தில் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தா­கவும் கூறி­யுள்ளார்.
ஆகவே, அடுத்த பொதுத் தேர்­தலை சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லேயே ஐக்­கிய தேசியக் கட்சி முகங்­கொ­டுப்­ப­தற்கு தயா­ராகி வரு­கின்­றது. ஆகவே தலை­மைத்­துவ பதவி குறித்து ஐ.தே.கவுக்குள் பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன என்று கூறு­வ­தெல்லாம் தவறான பிர­சா­ரங்­க­ளாகும். அது­மட்­டு­மன்றி 2024ஆம் ஆண்டு வரையில் தலை­மைத்­து­வப்­ப­த­வியில் நீடிப்பார் என்று ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் தான் கூறப்­பட்­டது. தற்­போது அந்த நிலை­மைகள் எல்லாம் மாற்­ற­ம­டைந்­துள்­ளன.

கேள்வி: -ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கட்சித் தலை­மையை வகிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உறுப்­பி­னர்கள் அணி­யொன்று இருப்­ப­தோடு மறு­பக்­கத்தில் 2024வரையில் கட்சித் தலை­மைத்­து­வத்­தினை மாற்­ற­மு­டி­யாது என்றும் யாப்பு திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­தல்­லவா?

பதில்:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் புதிய தலை­மையை விரும்­பு­கின்­றார்கள். அந்தத் தலைமை சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்று கரு­து­கின்­றார்கள். ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட பின்­ன­டை­வுகள் தனியே நபர் சார்ந்­த­தொன்று அல்ல. அந்த பின்­ன­டைவை கட்சி சார்ந்தே சிந்­திக்க வேண்டும். ஆகவே  இதில் அணி­யாக பிரிந்து நிற்­ப­தாலோ பிள­வு­பட்­டுக்­கொள்­வ­தாலோ எவ்­வி­த­மான பல­னையும் யாரும் அடை­யப்­போ­வ­தில்லை.
நாட்டில் தற்­போது ராஜ­ப­க் ஷவின் குடும்ப ஆட்சி ஆரம்­பித்­துள்­ளது. அந்த குடும்ப ஆட்­சியின் பாதிப்­புக்­களை நாம் கடந்த காலத்தில் உணர்ந்­தி­ருக்­கின்றோம். அந்த அடிப்­ப­டையில்  நாம் வலு­வான தரப்­பாக அடுத்த தேர்­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க  வேண்­டி­யி­ருக்­கின்­றது. இல்­லாது விட்டால் எமது பிர­தான எதி­ரா­ளி­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை­மையே ஏற்­பட்­டு­விடும் என்­பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அத­ன­டிப்­ப­டை­யி­லேயே நாம் தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் எம்­மு­ட­னேயே கைகோர்த்­துள்­ளன. ஆகவே நாம் எமது பலத்­தினை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையே உடன் எடுக்க வேண்­டி­யுள்­ளது. சஜித் பிரேம­தா­ஸ­வுக்கு கிடைத்­துள்ள மக்கள் செல்­வாக்­கினை அடிப்­ப­டை­யாக கொண்டு தொடர்ந்தும் ஐக்­கி­யத்­துடன் கட்­சியை முன்­னோக்கிக் கொண்டு செல்ல வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அத்­துடன் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 113இற்கும் அதி­க­மான ஆச­னங்­களைப் பெற்று பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்­தினை கைப்­பற்­று­வதை இலக்­காக கொண்டு செயற்­பட வேண்டும்.


கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த நப­ரி­டத்தில் கட்­சித்­த­லை­மைப் ­ப­த­வியை வழங்கி பொதுத்­தேர்­த­லுக்கு முகங்­கொ­டு­க்கின்­ற ­போது பெரும்­பான்மை மக்­களின் பெரும்­பான்­மை­யான ஆத­ரவு உடன் கிட்டும் என்று கரு­து­கின்­றீர்­களா?
பதில்:- சஜித் பிரே­ம­தாஸ பிரதித் தலை­வ­ராக இருந்­த­போதும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு சொற்­ப­கா­லத்தின் முன்­ன­தா­கவே வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டார். அதனால் பிர­சார பணி­களின் போது சில நெருக்­க­டி­களும் இருந்­தன. தற்­போது அவ்­வாறில்லை. புதிய வரு­டத்தில் சஜித் பிரேம­தாஸ கட்­சியின் தலை­மைப்­பொ­றுப்­பி­னையும் ஏற்பார். அதனை விடவும் தற்­போதே அவர் தொகுதி வாரி­யாக மக்கள் சந்­திப்­புக்­க­ளையும் ஆரம்­பித்து விட்டார். மேலும் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­களும், ஏனைய உறுப்­பி­னர்­களும் அவ­ருக்கு பக்­க­ப­ல­மாக உள்­ளனர். ஆகவே நிச்­ச­ய­மாக அவர் தலை­மையில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை எனக்கு மட்­டு­மல்ல முழு ஐ.தே.க ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் உள்­ளது.

கேள்வி:- உங்­க­ளு­டைய அர­சாங்­கத்தின் நான்கு ஆண்­டுகள் ஆட்சிக் காலத்தில் நாட்டின் தேசிய பாது­காப்பு நலி­வுற்­றமை, மத்­தி­ய­வங்கி மோச­டிகள் முதல் பல்­வேறு விட­யங்கள் குறித்த விமர்­ச­னங்கள் பற்றி?

பதில்:- இந்த விட­யங்கள் தொடர்­பாக நாம் விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­களை அமைத்­தி­ருந்தோம். அது­பற்றி விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. ஆனால் ராஜ­பக் ஷ அணி­யினர் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முக­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுத்த போது அதற்கு எதி­ராக பொய்­யான பிர­சா­ரங்­களை செய்­தார்கள். எம்.சி.சி.ஒப்­பந்­தத்தின் மூலம் அமெ­ரிக்­கா­வி­டத்தில் நாட்டை அடகு வைக்­கப்­போ­வ­தாக கூறி­னார்கள். தற்­போது பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, ராஜித சேனா­ரத்ன என்று சிரேஷ்ட அமைச்­சர்­களை கைது செய்து அர­சியல் பழி­வாங்­கல்­களை ஆரம்­பித்­துள்­ளார்கள்.
அத்­துடன் எம்.சி.சி ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் முனை­கின்­றார்கள். மேலும் ஊழல் மோச­டிகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட கோப்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு இட­ம­ளிக்­காது அத­னையும் ஒத்­தி­வைத்­துள்­ளார்கள். ஒட்­டு­மொத்­த­மாக ஜன­நா­யக விரோ­த­மான செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்டு நாடு சர்­வா­தி­கா­ரத்­தினை நோக்கி பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது.

கேள்வி:- 2015ஆம் ஆண்டு ஆட்சி அதி­கா­ரத்­தினை நீங்கள் பெறு­வ­தற்­கான பிர­சா­ரங்­களை செய்­த­போது ஊழல்­மோ­ச­டி­களை கட்­டுப்­ப­டுத்­துவோம், பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து குற்­ற­வா­ளி­களை தண்­டிப்போம் என்று கூறி­யி­ருந்­த­போதும்  எந்­த­வொரு விட­யங்­க­ளிலும் செயற்­பாட்டு ரீதி­யான நிறை­வினைக் கண்­டி­ருக்­க­வில்­லையே?
பதில்:- ஆம், நாங்கள் சுயா­தீன கட்­ட­மைப்­புக்­களை உரு­வாக்­கி­யி­ருந்தோம். நீதி­மன்ற சுயா­தீ­னத்­தினை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். ஜன­நா­ய­கத்துக்கும், அடிப்­படை உரி­மை­க­ளுக்கும் மாறாக ஏதேச்­ச­தி­கா­ர­மாக நாம் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. காட்டுச் சட்­டங்­களை அமு­லாக்­கி­யி­ருக்­க­வில்லை. ஊழல், மோசடி உள்­ளிட்ட அனைத்து வழக்­கு­க­ளையும் உரிய நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் ஊடா­கவே முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தோம். ஆனால் அவ்­வா­றான செயற்­பா­டுகள் எவையும் மக்­க­ளி­டத்தில் செல்­ல­வில்லை. எம்­மைப்­பற்றிய விமர்­ச­னங்­களே அதி­க­மாகச் சென்­றன.
எமது அர­சாங்­கமும் சட்ட நட­வ­டிக்கை விட­யங்­களில் தாம­தங்­களைச் செய்­தி­ருக்­கின்­றது என்ற ஆதங்கம் எனக்கும் தனிப்­பட்ட ரீதியில் உள்­ளது. இவ்­வா­றான தாம­தங்­க­ளுக்கு எமது அர­சாங்­கத்தில் உள்ள சிலரும், அதிகாரிகளுமே காரணமாக இருந்துள்ளனர். இந்நிலைமையால் எமக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ‘டீல்கள்’ இருக்கின்றனவா என்று சாதாரண பொதுமக்கள் சந்தேகிக்கின்ற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.


கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்வே இல்லை என்று கூறியுள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு அதுகுறித்து எவ்வாறிருக்கும்?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியானது 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொண்ட தரப்பாகும். மேலும் அனைத்து இன மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் இனநல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது நிலைப்பாட்டினை சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார். பெரும்பான்மை மக்கள் மத்தியில் ராஜபக் ஷவினரால் விதைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள எம்மீதான மாறுபட்ட நிலைப்பாட்டினை மாற்றியமைத்து அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்பதே எமது முதற்கட்ட சவால் மிக்க பணியாகின்றது.


- நேர்காணல் - ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22