‘பிகில்’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது பிகில். இந்த படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க ஒப்புக்கொண்டு ‘தளபதி 64’ என தற்காலிமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் திகதி மாலை 5 மணி அளவில் இணையத்தில் வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விஜயுடன் இந்தப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா,, மாளவிகா மோகனன் அர்ஜுன் , ஸ்ரீமன், சஞ்சீவ் ரம்யா சுப்ரமணியன் ,‘96 ’ படப்புகழ் கௌரி கிஷன், சுருதி ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்., இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார்.

தர்பார் படத்தின் டீசர் மற்றும் டிரைலர், விஜய் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரின் செய்த சாதனையை எட்டவில்லை என்று செய்தி வெளியானது, இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிடுகிறது. அதனை வரவேற்று ட்ரெண்டிங் ஆகும் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

தொகுப்பு கேயார்ஜி.