சிங்­கள தேசி­ய­வா­தத்தை நாடும் ஐ.தே.க

30 Dec, 2019 | 04:21 PM
image

ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாஸ தோல்­வியைத் தழு­விய பின்னர், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தேசி­ய­வாதம் வலுப்­பெ­று­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.


இந்­த­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்கு முக்­கி­ய­மான கார­ணி­யாக இருந்­தது, சிங்­கள பௌத்த தேசி­ய­வாதம் தான்.


சிறு­பான்­மை­யினர் தமது ஆச­னங்­க­ளையும், வாக்­கு­க­ளையும் வைத்துக் கொண்டு அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக இருக்­கி­றார்கள் என்றும், தனிச் சிங்­கள  பௌத்த வாக்­கு­களால் ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்து அந்த நிலையை தோற்­க­டிக்க வேண்டும் என்றும், சிங்­கள பௌத்த தேசி­ய­வாத சக்­திகள் விரும்­பின.


கோத்­தா­பய ராஜபக் ஷ அத்­த­கை­ய­தொரு தேசி­ய­வாத சிந்­த­னை­யா­ள­ரா­கவும், போர் வெற்­றியை நிலை­நாட்­டிய நாட்டுப் பற்­றா­ள­ரா­கவும், இருந்த தால், சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தி­களால், அந்த திட்­டத்தை இல­கு­வாக நிறை­வேற்ற முடிந்­தது.


ஐக்­கிய தேசியக் கட்சி, சிறு­பான்மைக் கட்­சி­களின் பலத்­துடன் சிங்­களத் தேசி­ய­வாத சக்­தி­க­ளுடன் மோதி­யது. எனினும், அதனால் சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்தின் வேரை அசைக்க முடி­ய­வில்லை.
ஐ.தே.கவைப் பொறுத்­த­வ­ரையில், சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் பெற்­றி­ருந்த நம்­பிக்­கையை சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் பெற்றுக் கொள்ள முடி­யாமல் போயி­ருந்­தது.
சிங்­கள பௌத்த மக்­களின் கணி­ச­மான வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தால் மட்­டுமே, சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களால் வெற்­றியைப் பெற முடியும். ஆனால் சஜித் பிரே­ம­தா­ஸ­வினால் சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்ட அள­வுக்கு அவரால், சிங்­கள பெளத்த மக்­களின் வாக்­கு­களைப் பெற முடி­ய­வில்லை.


ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­விக்குப் பின்னர், ஐ.தே.கவின் முக்­கிய தலை­வர்கள் அனை­வரும் இந்த விட­யத்தை ஒப்புக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.


சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்­க­ளிடம் இருந்து ஐ.தே.க விலகிச் சென்­றி­ருக்­கி­றது, ஐ.தே.­கவின் மீதான நம்­பிக்­கையை அவர்கள் இழந்­தி­ருக்­கி­றார்கள் என்று அந்தக் கட்­சியின் தலை­வர்கள் பலரும் வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருக்­கிறார்.


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களில் சிங்­கள பௌத்­தர்கள் அதிகம் பாதிக்­கப்­ப­டாத போதும், நாட்டைப் பாது­காக்க ராஜபக் ஷவினர் ஒரு­வரால் தான் முடியும், என்று அவர்கள் உறு­தி­யாக நம்பத் தொடங்­கி­னார்கள். இதுவே ஐ.தே.கவுக்குப் பெரும் நெருக்­க­டி­யாக மாறி­யது.


அதனால் தான், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வர வேண்­டு­மானால் சிங்­கள பௌத்த மக்­களின் நம்­பிக்­கையைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அவர்­களின் வாக்­கு­களை அதி­க­ளவில் பெற்றுக் கொள்­வ­தற்கு முனைய வேண்டும் என்ற கருத்து ஐ.தே.கவுக்குள் வலுப் பெற்­றி­ருக்­கி­றது.


ஒரே வரியில் சொல்­வ­தானால், ராஜபக் ஷவினர் எவ்­வாறு சிங்­களத் தேசி­ய­வாத அர­சி­யலை முன்­னெ­டுத்­த­னரோ, விகா­ரை­களின் ஊடாக மஹிந்த ராஜபக் ஷ எவ்­வாறு பௌத்த சிங்­கள வாக்­கு­களை தன் பக்கம் ஈர்த்­தாரோ- அதே­போல ஐ.தே.கவும் விகா­ரை­க­ளையும், சிங்­கள பௌத்­தர்­க­ளையும் நோக்கிச் செல்ல வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.


பிரித்­தா­னிய  பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­தமர் பொறிஸ் ஜோன்­சனின் கொன்­சர்­வேட்டிவ் கட்சி வெற்றி பெற்­றதை அடுத்து, டுவிட்­டரில் கருத்து வெளி­யிட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ அமெ­ரிக்கா, இந்­தியா, இலங்கை வரி­சையில் பிரித்­தா­னி­யா­விலும் தேசி­ய­வாதம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.


அவ­ரது அந்தக் கருத்தின் ஊடாக கூற வந்த விடயம், உல­கமே தேசி­ய­வாத அலையில் அள்­ளுப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது தான்.


அயல் நாடு­களில் மாத்­தி­ர­மன்றி, மேற்­கு­ல­கிலும் தேசி­ய­வா­தத்தை முன்­னி­றுத்தும் கட்­சி­களும் வேட்­பா­ளர்­களும் வெற்றி பெறு­கின்ற நிலையில், சிங்­கள பௌத்த மக்­க­ளிடம் இருந்து இனி­மேலும் விலகிச் சென்று விடக்­கூ­டாது என்­பதில் ஐ.தே.க உறு­தி­யான முடிவை எடுத்து விட்­டது.
தேர்தல் முடிந்த சில நாட்­க­ளி­லேயே, ஐ.தே.க தலை­வர்கள் சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையை தக்க வைத்துக் கொள்ளத் தவறி விட்டோம் என்று புலம்­பி­னார்கள்.
அதற்குப் பின்னர் சிங்­கள பௌத்த தேசி­ய­வாத உணர்­வு­களின் பக்கம் ஐ.தே.க சாய்­வ­தற்­கான அறி­கு­றிகள் வெளிப்­பட்­டன. எனினும் கட்­சிக்குள் நில­வு­கின்ற தலை­மைத்­துவ குழப்­பங்­களால், இந்த விவ­காரம் சற்று மந்­த ­நி­லையை எட்­டி­யி­ருக்­கி­றது.


ஆனால், தலை­மைத்­துவக் குழப்­பங்கள் ஓர­ள­வுக்கு ஓய்ந்த பின்னர், சிங்­கள பெளத்த தேசி­ய­வா­தத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­மு­றை­களை ஐ.தே.க நாடப் போகி­றது.
ஐ.தே.க சிறு­பான்­மை­யின தமிழ், முஸ்லிம் மக்­களின் நம்­பிக்­கையைப் பெற்றுக் கொண்டால் போதாது, சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­க­ளையும் பெற்றால் தான் நிலைத்­தி­ருக்க முடியும் என்­பது கடந்த தேர்­தலில் உறு­தி­யாகி விட்­டது.


இதற்குப் பின்­னரும் அந்தக் கட்சி தூங்கிக் கொண்­டி­ருக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகின்ற சஜித் பிரே­ம­தாஸ, சிங்­களத் தேசி­ய­வா­தத்தை இல­குவில் உள்­வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு தலைவர் தான். அவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் போன்­றவர் அல்ல.
அண்­மைக்­கா­ல­மாக, சஜித் பிரே­ம­தாஸ வெளிப்­ப­டுத்தி வரு­கின்ற கருத்­துக்கள்-  அவர், சிங்­களத் தேசி­ய­வாதத் தலை­வ­ராக தன்னை மாற்றிக் கொள்ள எத்­த­னிக்­கிறார் அல்­லது சிங்­களத் தேசி­ய­வாத சக்­தி­களின் கவ­னத்தை ஈர்க்க முனை­கிறார் என்­பதை உணர்த்­து­வ­தாக உள்­ளன.
கோத்­தா­பய ராஜபக் ஷவின் நல்ல திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஒத்­து­ழைக்கத் தயார் என்று சஜித் பிரே­ம­தாஸ முதலில் அறி­வித்­தி­ருந்தார்.
அதற்குப் பின்னர், எம்.சி.சி, அக்சா, சோபா போன்ற நாட்­டுக்கு எதி­ராக வெளி­நா­டு­க­ளு­ட­னான உடன்­பா­டு­களை கிழித்­தெ­றிய வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.
இவை­யெல்லாம் சிங்­களத் தேசி­ய­வாத சக்­தி­களின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக அவர் கையா­ளு­கின்ற  யுக்­திகள் தான்.
சிங்­கள பௌத்த தேசி­ய­வாத சக்­தி­களின் மத்­தியில் தானும் அவ்­வா­றா­ன­தொரு தலைவர் தான் என்று நிரூ­பிக்க முனை­கிறார் சஜித் பிரே­ம­தாஸ.
  தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒரு சிங்­களப் பேரி­ன­வாதக் கட்சி தான். கடந்த காலங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள், அடக்­கு­மு­றை­க­ளுக்கு கார­ண­மான கட்சி தான்.
ஆனாலும் ஒப்­பீட்­ட­ளவில் பொது­ஜன பெர­முன,  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட, ஐ.தே.க பர­வா­யில்லை என்ற கருத்து பெரும்­பா­லான தமி­ழர்­க­ளிடம் காணப்­பட்­டது.
ஆனால், சஜித் பிரே­ம­தா­ஸவின் தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்சி சிங்­களத் தேசி­ய­வாத கோட்­பா­டு­க­ளுக்கு அமைய செயற்­படத் தொடங்­கினால்- தமி­ழர்கள் மற்றும் முஸ்­லிம்கள் மத்­தியில் அந்தக் கட்சி கொண்­டுள்ள நம்­பிக்கை தகர்ந்து விடும்.
அது­மாத்­தி­ர­மன்றி, இரண்டு பிர­தான கட்­சி­களும் போட்டி போட்டுக் கொண்டு இன­வாதம் கக்­கினால், சிங்­கள பௌத்த நலன்­க­ளுக்­கான போட்­டியில் குதித்தால்- அது சிறு­பான்­மை­யின மக்­களின் நல­னுக்குப் பாத­க­மா­கவே அமைந்து விடும்.


அது மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் தற்போது கொண்டுள்ள கூட்டை ஐ.தே.க எந்தளவுக்கு கொண்டு செல்லும் என்ற கேள்விகளும் உள்ளன.
குறிப்பாக, சஜித் பிரேமாதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பின்னர், அந்தக் கட்சி தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் எந்தளவுக்கு நெருக்கத்தைப் பேணும் என்று கூறமுடியாத நிலையே தற்போது காணப்படுகிறது.
ஏனென்றால், சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு தலைமை தாங்கினால் இலகுவாக நாட்டின் அதிகாரத்தைப் பிடித்து விடலாம் என்ற கருத்து, இப்போது ஐ.தே.கவில் வலுப்பெற்றிருக்கிறது,
இவ்வாறான நிலையில், அதனை நோக்கித் தான் சஜித் பிரேமதாஸ நகர முயற்சிப்பாரே தவிர, தமிழ், முஸ்லிம்களைப் பற்றி கரிசனை கொள்ள வாய்ப்புகள் குறைவு.
-சத்திரியன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22