பல்­லி­னங்கள் வாழு­மொரு நாடான இலங்­கையில் இனம், மதம், மொழி என்ற  ரீதியில்  பிர­ஜை­களை வேறு­ப­டுத்தி கையா­ளு­மொரு நிலை வேரூன்றி இருக்­கின்­றது. இந்த வேறு­பா­டு­க­ளினால்  உயிரிழப்­புக்­களும், பொரு­ளா­தார சேதங்­களும், இனங்­க­ளுக்­கி­டையே நம்­பிக்­கை­யீ­னங்­க­ளுமே  பெறு­பே­று­க­ளாக இருக்­கின்­றன.

இத­னி­டையே, இந்த பெறு­பே­று­க­ளை­யிட்டு சர்­வ­தேச நாடு­களும், அமைப்­புக்­களும் இலங்­கையை கேள்­விக்கு உட்­ப­டுத்­திய போதெல்லாம், குற்­றங்­களும், குறை­களும், வேறு­பா­டு­களும் களையப்­படும், நீதி­யான விசா­ர­ணைகள் நடை­பெறும் என்று ஆட்­சி­யா­ளர்கள் வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கி­னார்கள். நாட்டு மக்­களை ஆட்­சி­யா­ளர்கள் ஏமாற்­றி­யது போன்று சர்­வ­தே­சத்­தையும் ஏமாற்­றி­னார்கள். இதனால், சர்­வ­தே­சத்­துடன் முட்டி மோதிக் கொள்ளும் நிலையும் உரு­வா­கி­யுள்­ளது. சர்­வ­தே­சத்தின் இந்த நெருக்­க­டியில் இருந்து ஆட்­சி­யா­ளர்கள் விடு­பட்டுக் கொள்­வ­தற்கு நாட்டின் நிலை­யான சொத்­துக்­களை தாரை வார்த்­துள்­ளார்கள். நாடு படிப்­ப­டி­யாக அந்­நி­யர்­களின் சொத்­தாக மாறிக் கொண்­டி­ருக்­கின்­றது.


இவ்­வா­றான  சிக்­க­லான  நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் தோற்­று­விக்­கப்­பட்ட 52 நாள் அர­சியல் நெருக்­கடி, ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளினால் நாட்டின்  பொரு­ளா­தா­ரத்தில் பாரிய பின்­ன­டை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வி­த­மாக இடி­யப்ப பின்­னலைப் போன்­றுள்­ள­தொரு நாட்­டையே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ பொறுப்­பேற்­றுள்ளார். இந்­நி­லை­மையை  மிக இல­கு­வாக சீர் செய்து விட முடி­யாது. இறுக்­க­மான போக்கும், நீதி­யான தன்­மையும், இனம், மொழி, மதம் போன்ற சார்­பு­களை மறந்து இலங்­கையர் என்ற பார்­வையும் இருந்தால் மாத்­தி­ரமே இலங்­கையை மீட்­டெ­டுக்க முடியும்.


இலங்­கையின் இன்­றைய நிலை சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்­னரே முளை­யிட்­டது. ஆயினும், அந்­நிய ஆட்­சி­யா­ளர்கள் அதற்கு இடங் கொடுக்­க­வில்லை. 1915ஆம் ஆண்டு ஏற்­பட்ட சிங்­கள – முஸ்லிம் இனக் கல­வ­ரத்தை அன்­றைய ஆட்­சி­யா­ளர்­களும், படை­யி­னரும் பார்த்துக் கொண்­டி­ருக்­க­வில்லை. அதனை கட்­டுப்­ப­டுத்­தி­னார்கள். இனக் கல­வ­ரத்­திற்கு பின்னால் செயற்­பட்­ட­வர்­களை கைது செய்து சட்­டத்தின் பிர­காரம் தண்­டனை வழங்­கி­னார்கள்;. ஆனால், இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­க­ளாக சுதே­சிகள் மாறி­யதன் பின்னர் இனங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட கல­வ­ரங்­களை நீதியின் அடிப்­ப­டையில் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை. இனக் கல­வ­ரங்­களின் பின்­ன­ணியில் செயற்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை. ஆட்­சி­யா­ளர்கள் இன­வா­தி­களின் பாச­றையின் போத­கர்­க­ளாக இருந்­தார்கள்.


ஆட்­சி­யா­ளர்கள் தங்­களின் செல்­வாக்கை மக்கள் மத்­தியில் நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்கு இனங்­களை மோத விட்­டார்கள். நாட்டின் வரு­மா­னத்தில் பெரும்­ப­கு­தியை பங்கு போட்டுக் கொண்­டார்கள். அபி­வி­ருத்­திக்­காக வெளி­நா­டு­களில் கடன்­களைப் பெற்றுக் கொண்­டார்கள். இலங்கை போன்று சிங்­கப்­பூரை மாற்­றுவோம் என்று இருந்த நாட்டை குட்டிச் சுவ­ராக்கி விட்­டார்கள். இன்று இலங்­கையை சிங்­கப்பூர் போன்று அபி­வி­ருத்தி செய்வோம் என்று கூறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதுதான் சுதே­சி­களின் ஆட்­சியில் நாம் அடைந்­துள்ள நிலை­யாகும். இதனை மாற்­றி­ய­மைக்க ஆட்­சி­யா­ளர்கள், எதிர்க் கட்­சி­யினர், ஏனைய கட்­சி­யினர் என நாட்டு மக்கள் எல்­லோரும் தியா­கத்­தோடு உழைக்க வேண்­டி­யுள்­ளது. ஆனால், அதற்­கு­ரிய சூழல் முற்­றாக இல்­லா­துள்­ளது.


இத்­த­கைய கொடு­மை­க­ளுக்குள் மாட்­டி­யுள்ள இலங்­கையை அதி­ரடி நட­வ­டிக்­கை­களின் மூல­மாக கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பக் கூடிய நிரந்­த­ர­மான திட்­டங்கள் வகுக்­கப்­பட வேண்டும். ஆட்­சி­யா­ளர்கள் மாறி­னாலும், அத்­திட்­டத்­தையே நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். ஆட்­சி­யா­ளர்கள், எதிர்க் கட்­சி­யினர், சிறு­பான்­மை­யி­னங்­களின் பிர­தி­நி­திகள், மதத் தலை­வர்கள், புத்­தி­ஜீ­விகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஒன்­றி­ணைந்து நீண்ட காலத் திட்­டத்தை வகுக்க வேண்டும். இவ்­வாறு உரு­வாக்­கப்­படும் திட்­ட­மொன்றின் மூலம்தான் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும். ஆனால், ஆட்சி மாறும் போது திட்­டங்­களும் மாறு­கின்­றன. இவ்­வாறு அடிக்­கடி மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்­க­ளினால் நாடு ஒரு போதும் முன்­னேற்றம் அடை­யாது.


சுதே­சி­களின் ஆட்­சியில் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சிறு­பான்­மை­யினர். ஆட்சி மாறும் போதெல்லாம் விடிவு கிடைக்­கு­மென்று நம்­பி­னார்கள். ஆனால், அவர்­க­ளுக்­கெ­தி­ராக அநி­யா­யங்­கள் தான் நடை­பெற்­றன. அந்த அநி­யா­யங்­க­ளுக்கு ஒரு சில சிறு­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­களும் துணை போனார்கள் என்­பது தான் உண்­மை­யாகும். சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தேர்தல் காலங்­களில் பல வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. ஆட்­சியை பிடித்துக் கொண்­டதும், சிறு­பான்­மை­யி­னரை மேலும் நசுக்­கி­னார்கள்.


ஆட்சி மாற்றம் மூல­மாக ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தொரு இணக்­கப்­பாட்­டை­யா­வது அடைந்து கொள்­ள­லா­மென்று சிறு­பான்­மை­யினர் நம்­பி­னார்கள். 2015ஆம் ஆண்டு சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வுடன் தேசிய அர­சாங்­க­மொன்று உரு­வாக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அதி­காரப் போட்­டியில் ஈடு­பட்­டார்கள். இவர்­களின் ஆட்­சியில் முஸ்­லிம்­களின் மீது பல இடங்­களில் தாக்­கு­தல்கள் நடை­பெற்­றன. கடந்த காலங்­களைப் போன்றே பொலிஸார் பார்­வை­யா­ளர்­க­ளாக இருந்­தார்கள். ஆட்­சி­யா­ளர்கள் கண்டு கொள்­ளா­தி­ருந்­தார்கள். இனக் கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை.


ஆகவே, சிறு­பான்­மை­யி­னரின் அமோக ஆத­ர­வினால் உரு­வாக்­கப்­படும் ஆட்­சி­யினால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நீதியைப் பெற்றுக் கொள்ள முடி­யாது என்­பது நிரூபிக்­கப்­பட்­டுள்­ளது. இனம், மதம், மொழி என்ற முரண்­பா­டு­களைக் களையாது நாட்டில் நல்­ல­தொரு நிலை­மையை உரு­வாக்க முடி­யாது. ஆதலால், சிறு­பான்­மை­யி­னரின் அபி­லா­ஷைகள் நிறை­வே­று­வ­தற்கு ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும், வேறு­பா­டு­களை ஆயு­த­மாக்கிச் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­வர்க­ளி­னதும் மனங்­களில் மாற்றம் ஏற்­பட வேண்டும். இந்த மாற்­றங்கள் ஏற்­ப­டாத நிலையில் சிறு­பான்­மை­யினர் எந்த ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னாலும் தமது அபி­லா­ஷைகளை நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாது. ஆட்­சியை கைப்­பற்றிக் கொள்­வ­தற்கு சிறு­பான்­மை­யி­னரை நாடு­கின்­றார்கள். ஆட்­சிக்கு வந்­ததும் பௌத்த இன­வா­தத்தை மீறி செயற்­பட முடி­யா­த­வர்­க­ளாகி விடு­கின்­றார்கள். தாமா­கவே பௌத்த இன­வாத சிறைக்குள் தம்மை கைதி­யாக்கிக் கொள்­கின்­றார்கள்.


இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில்தான் நாட்டின் புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜ­பக் ஷ தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இவர் தேர்தல் காலங்­களில் அதிக வாக்­கு­று­தி­களைக் கொடுக்­க­வில்லை. இனப் பிரச்­சினை பற்றி பேச­வில்லை. அர­சியல் தீர்வு குறித்தும் பேச­வில்லை. ஆயினும், இனம், மதம், மொழி அடிப்­ப­டையில் முரண்­பா­டு­க­ளையும், பொரு­ளா­தா­ரத்தில் ஒரு தேக்க நிலை­யையும், சர்வதேச உற­வு­களில் பின்­ன­டை­வையும், கடன் சுமை­யையும் உள்­ள­தொரு நாட்­டையே தமது தலை­மையில் சுமந்­துள்ளார். இதனை தீர்த்து வைக்கும் பொறுப்பு இவ­ருக்கு இருக்­கின்­றது. கடந்த கால ஜனா­தி­ப­திகள் போன்­றில்­லாது நாட்டு மக்­க­ளி­டையே வர­வேற்பைப் பெற்­றுள்ள பல அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றார். பெரும்­பான்­மை­யின மக்­களின் 70 வீத­மான ஆத­ரவைப் பெற்­ற­வ­ரா­கவும் இருக்­கின்றார். அதனால், சிறு­பான்­மை­யி­னரின் அபி­லா­ஷைகளை நிறை­வேற்றி நாட்டில் சுபீட்­சத்தை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். இதனை செய்­வதில் கூட பலத்த சவால்­களை பௌத்த இன­வா­தி­க­ளி­டையே எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும்.  பெரும்­பான்­மை­யினர் ஏற்றுக் கொள்­ளாத எந்­த­வொரு தீர்­வி­னையும் முன் வைக்க முடி­யா­தென்று நீதியை மறுக்க முடி­யாது.


பெரும்­பான்­மை­யி­னரின் ஆத­ரவைப் பெற்ற ஒரு­வ­ரா­கவும், நாட்டை பிரித்துக் கொடுக்­க­மாட்டார் என்ற நம்­பிக்­கையை பெற்ற ஒரு­வ­ரா­கவும், துணிச்சல் நிறைந்த ஒரு­வ­ரா­கவும், நாட்டின் நிர்­வா­கத்தில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற முற்­போக்குச் சிந்­த­னையைக் கொண்ட ஒரு­வ­ரா­கவும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ இருக்­கின்றார். ஆதலால், நாட்டில் புரை­யோடிப் போயுள்ள முரண்­பா­டு­க­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கு சரி­யா­ன­தொரு திட்­டத்தை வகுக்க வேண்­டு­மென்­பதே அனை­வ­ரி­னதும்  விருப்­ப­மாகும். இதே வேளை, தனியே பௌத்த சிங்­கள மக்­களின் ஆத­ர­வி­னாலும், சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் அமையும் அர­சாங்­கத்­தி­னாலும் நாட்டை நிர்­வ­கிக்க முடி­யாது. அது சர்­வ­தே­சத்­துடன் உள்ள உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு உத­வாது. சிறு­பான்­மை­யி­னரை கடந்த கால அர­சாங்­கங்­களை விடவும் மோச­மாக ஒதுக்கி வைத்­துள்­ள­தொரு பார்­வை­யையே ஏற்­ப­டுத்தும். ஆகவே, சிறு­பான்­மை­யி­னரின் மனங்­களை வெல்லக் கூடிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் தமக்கு இருக்­கின்ற செல்­வாக்கை பயன்­ப­டுத்தி நாட்டின் உண்மை நிலை­யையும், அதற்­கு­ரிய தீர்வை முன்வைக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் புரிய வைக்க வேண்டும்.


ஆனால், வழக்­க­மாக ஆட்­சி­யா­ளர்கள் இனங்­களை பிரித்தும், பௌத்த மேலா­திக்­கத்தை நிலை நிறுத்­த­வுமே செயற்­பட்டு வந்­துள்­ளார்கள். இதற்கு ஆட்சித் தலை­வரின் இடமும், வலமும் இருந்­த­வர்­களே கார­ண­மாகும். அத்­த­கை­ய­வர்கள் இன்­றைய ஆட்­சி­யிலும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இருக்­கின்ற பிள­வு­களை மேலும் விரி­வாக்கம் செய்யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­ற­வர்கள் ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், அதற்கு முன்­னரும் சிறு­பான்­மை­யினத் தலை­வர்­க­ளுக்கும், சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்கும் எதி­ரா­கவே கருத்­துக்­களை முன் வைத்து வந்­துள்­ளார்கள். பௌத்த கடும்­போக்கு வாதத்தின் மூல­மாக ஆட்­சியை தொடர முடி­யு­மென்று நம்­பிக்கை வைக்க முடி­யாது. அந்த நம்­பிக்­கையில் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது. மனித நேயத்­திற்கு மாற்­ற­மான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் நீண்ட காலம் நிலைத்­தி­ருந்த வர­லாறு கிடை­யாது.


இத்­த­கை­ய­தொரு கொள்­கை­யில் தான் இந்­தி­யாவில் பார­திய ஜனதா கட்­சி­யினர் தமது அர­சியல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்கள். இந்து மதத்­தி­னையும், அந்த மதத்தை பின்­பற்­று­கின்­ற­வர்­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்­தியே அர­சியல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்கள். இன்று குடி­யு­ரிமைச் சட்­டத்தைக் கொண்டு வந்­ததன் மூல­மாக பார­திய ஜனதா கட்­சிக்கும், அதன் ஆட்­சிக்கும் எதி­ராக பலத்த போராட்­டங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. சர்­வ­தேச நாடுகள் அந்த சட்டமூலத்தை வாபஸ் வாங்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. சில நாடுகள் இந்­திய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக கண்­ட­னங்­க­ளையும் தெரி­வித்­துள்­ளன. ஆதலால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் பல்­லின மக்கள் வாழும் நாட்டில் நிலை­யா­ன­தொரு ஆட்­சியை ஏற்­ப­டுத்தி நிலைக்கச் செய்ய முடி­யாது.
நாட்டு மக்கள் அனை­வரும் இலங்­கையின் பிர­ஜைகள். அவர்­க­ளுக்கு எல்லா உரி­மை­களும் உள்­ள­தென்ற சிந்­தனை வளர்க்­கப்­பட வேண்டும். இந்த சிந்­த­னையை வளர்ப்பதற்கு பதி­லாக இந்த நாடு பௌத்த நாடு, சிங்­களம் அரச மொழி என்ற கருத்­துக்­க­ளையே ஆட்­சி­யா­ளர்கள் விதைத்­தார்கள். இதனை 1947ஆம் ஆண்டு முதல் எம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது. 1947ஆம் ஆண்டு டி.எஸ்.சேன­நா­யக்க தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்;சியின் ஆட்சி அமைக்­கப்­பட்­டது. இதில் ஜீ.ஜீ.பொன்­னம்­பலம் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். இவ­ரது முயற்­சியில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தொழிற்­சா­லைகள் நிறு­வப்­பட்­டன. ஆயினும், இந்த ஆட்­சியில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரஜா உரி­மை­யையும், வாக்­கு­ரி­மை­யையும் இரத்துச் செய்யும் சட்ட மூலம் கொண்டு வரப்­பட்­டது. இதற்கு ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லமும் ஆத­ரவு வழங்­கினார். இதனால், தோட்டத் தொழி­லா­ளர்கள் பிரஜா உரி­மையையும், வாக்­கு­ரி­மை­யையும் இழந்­தார்கள்.
1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டாரநாயக்கா சிங்­கள மொழியை அரச கரும மொழி என்று அறி­வித்தார். பின்னர் அவர் தமி­ழுக்கும் அரச மொழி அந்­தஸ்து கொடுக்க முற்­பட்ட போது 1959ஆம் ஆண்டு பௌத்த பிக்கு ஒரு­வரால் சுட்டுக் கொலை செய்­யப்­பட்டார்.


1960ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டார நாயக்கா சிங்­கள மொழி மாத்­தி­ரமே அரச மொழி என்று அழுத்திக் கூறினார். அவ­சர காலச்சட்­டத்தைக் கொண்டு வந்தார். 1966ஆம் ஆண்டு ஜன­வரி 08ஆம் திகதி தமி­ழுக்கு விசேட சட்ட மூலம் கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அதற்கு எதிர்ப்­புக்கள் எழுந்­தன. அதன் விளைவு அதனை அமுல்­ப­டுத்த முடி­ய­வில்லை.


1972ஆம் ஆண்டு புதி­ய­தொரு யாப்பு உரு­வாக்­கப்­பட்­டது. அந்த யாப்பில் சோல்­பரி அர­சியல் யாப்பில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு காப்­பீ­டாக இருந்த 29(02) சரத்­தி­லுள்ள அம்­சங்கள் முற்­றாக நீக்­கப்­பட்­டன.
1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜய­வர்த்­தன தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு தருவோம் என்று தமிழ், முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் ஆட்சி அமைத்தார். அவர் 1978ஆம் மற்­று­மொரு புதிய அர­சியல் யாப்பைக் கொண்டு வந்தார். அதில் சிங்­களம் அரச நிர்­வாக மொழி என்றும், பௌத்தம் அரச மதம் என்றும் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது.


1979ஆம் ஆண்டு அவ­சர காலச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. 1982ஆம் ஆண்டு தமது ஆட்­சியை நீடித்துக் கொள்­வ­தற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினார். 1983 ஜூலைக் கல­வரம் அதனைத் தொடர்ந்து நாட்டில் சிவில் யுத்தம் நடை­பெற்­றது. 1987ஆம் ஆண்டு இலங்கை –- இந்­திய ஒப்­பந்தம் நடை­பெற்­றது. 13ஆவது திருத்தச் சட்­டத்தின் மூல­மாக மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. ஆயினும், 13ஆவது திருத்தச் சட்­டத்தை முறை­யாக அமுல்­ப­டுத்­த­வில்லை.


இவ்­வாறு ஆட்­சி­யா­ளர்கள் காலத்­திற்கு காலம் அர­சியல் யாப்­புக்­களை உரு­வாக்­கியும், புதிய சட்ட மூலங்­களைக் கொண்டு வந்தும் சிறு­பான்­மை­யி­னரின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட்­டார்கள். இந்த நிலை­மையின் தொடர்ச்­சியின் உச்சக் கட்­டம்தான் பௌத்த இன­வா­தமும், மத­வா­தமும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு ஆட்­சி­யா­ளர்கள் பெரிதும் துணை­யாகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இன்று ஆட்­சி­யா­ளர்­களை தீர்­மா­னிக்­கின்­ற­வர்கள் நாங்­கள்தான் என்று பௌத்த இன­வாத தேரர்­களும், அமைப்­புக்­களும் நிரூ­பித்­துள்­ளன. இதன் ஆபத்தை சிறு­பான்­மை­யினர் மட்­டு­மன்றி பெரும்­பான்­மை­யி­னரும் ஆட்­சி­யா­ளர்­களும் சிந்­திக்க வேண்டும். இந்­நிலை எத்­த­கைய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தற்கு இந்­தி­யாவின் இன்­றைய நிலை நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும்.
மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்­கி­னார்கள். 2009ஆம் ஆண்டு கண்ட யுத்த வெற்றி அவர்­களின் தலை­க­ளுக்குள் அகம்­பா­வத்தை உரு­வாக்­கி­யது. இது பௌத்த நாடு, சிறு­பான்­மை­யினர் வாழ வந்­த­வர்கள் என்­றெல்லாம் கருத்­துக்­களை முன் வைத்­தார்கள். ஆட்­சி­யா­ளர்கள் கண்டு கொள்­ள­வில்லை. சிறு­பான்­மை­யினர் ஆட்சி மாற்­றமே தீர்வு என்று சிந்­தித்­தார்கள். 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­களில் நல்­லாட்சி எனும் ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­னார்கள். அது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நல்­லாட்­சி­யாக அமை­ய­வில்லை. இன­வா­திகள் முஸ்­லிம்­களை பல இடங்­களில் தாக்­கி­னார்கள்.


மஹிந்­தவின் ஆட்சி பர­வா­யில்லை என்று பேச வைத்­தார்கள். 2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஆட்­சியை சிறு­பான்­மை­யி­னரும், பெரும்­பான்­மை­யி­னரும் வெறுத்­தார்கள். ஏப்ரல் 21 தற்­கொலை தாக்­குதல் நடை­பெற்­றது. நாட்டின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யது.


இத்­த­கை­ய­தொரு வர­லாற்றைக் கொண்­டுள்ள இலங்­கையை புதிய ஜனா­தி­ப­தி­யினால் மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. மிகக் கடி­ன­மான பணி­யாகும். ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்வி அடைந்­துள்ள ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பௌத்த இன­வா­தத்­தையே பேசும் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. பொது­ஜன பெர­முன  ஜனா­தி­பதித் தேர்­தலைப் போலவே பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் பௌத்த கடும்­போக்­கு­வா­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி அதிக ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. அதற்குரிய வகையில் தமது பிரசாரத்தை இப்போதே மேற்கொண்டுள்ளது.


பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி அதிக ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்­ளு­மாயின் ஜனா­தி­ப­திக்கும், பிர­தம மந்­தி­ரிக்கும் இடையே அதி­காரப் போட்டி ஏற்­படும். இந்­நிலை நாட்டை மேலும் பாதிக்கச் செய்யும். பொது ஜன பெர­முன பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆட்­சியை அமைத்­தாலும் அதி­காரப் போட்டி ஜனா­தி­ப­திக்கும், பிர­தம மந்­தி­ரிக்கும் இடையே ஏற்­படும். பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ விரும்­பு­கின்றார். பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரத்தைப் பெற்று பிர­தமர் அதி­கா­ர­மிக்­க­வ­ராக இருக்க வேண்­டு­மென்று மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவும், அவரைச் சார்ந்­த­வர்­களும் விரும்­பு­கின்­றார்கள். அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்ற இந்த விருப்­பங்கள் அதி­காரப் போட்­டியை ஏற்­ப­டுத்தும் என்றே எதிர் பார்க்­கப்­ப­டு­கின்­றன.


மேலும், நாட்டை முன்­னேற்ற வேண்­டு­மாயின் மத­வா­தங்­களும், இன­வா­தங்­களும் ஒழிய வேண்டும். இந்­நாடு மூவி­னங்­க­ளுக்­கு­மு­ரிய நாடு என்ற நிலை எல்­லோ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். இந்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் பிடி­யி­லி­ருந்து ஆட்­சி­யா­ளர்கள் பிடு­பட வேண்டும். அதனைச் செய்ய முடி­யுமா என்­ப­துதான் கேள்­வி­யாகும். பௌத்த கடும்­போக்­கு­வா­தி­க­ளி­னதும், இன­வா­தி­க­ளி­னதும் துணை­யோடு ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி கொண்ட ஜனா­தி­பதி கோத்­தா­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கும், அவர்­களின் துணை­யோ­டுதான் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்றி கொள்ள வேண்­டு­மென்று சிந்­திக்­கின்­ற­தொரு நிலையில் பௌத்த கடும்போக்குவாதிகளினதும், பௌத்த இனவாத தேரர்களினதும் ஆதிக்கம் அரசாங்கத்தின் நடைமுறைகளில் இருக்கவே செய்யும் என்றே இன்றைய நிலையில் நம்மால் முடிவு செய்ய முடிகின்றது.
- சஹாப்தீன்