பருத்தித்துறை ஆழ்கடலுக்கு தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய கடற்தொழிலாளி உறக்கத்துக்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான த. தர்சன் (வயது-24) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

ஆழ்கடல் தொழிலுக்கு சென்று நேற்று கரைதிரும்பியிருந்த நிலையில் இரவு நித்திரைக்கு சென்றவர் இன்று அதிகாலை மூச்சடங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

உறவினர்களால் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.