காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர்  ராஜ்குமார் மீது தாக்குதல்

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 03:44 PM
image

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும்   காணாமல் போன உறவுகளின் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில். குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழர்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த போர்குற்றவாளி தன் எழுச்சி மக்கள் போராட்டங்களையும் காட்டுக்கொடுக்க வந்துவிட்டான். ஐ.நாவே ஓநாயை உடனடியாக கைதுசெய் உண்மைகள் வெளிவரும்”.என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை  ஏந்தியிருந்ததுடன்,அவரது உருவபடத்திற்கு சாணியினை கரைத்து ஊற்றியதுடன் விளக்குமாறால் அடித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இதனால் கோபமடைந்த ஈழமக்கள் ஜனநாயாக கட்சியின் உறுப்பினர்கள் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். குறித்த பகுதியில் நின்றிருந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சூசைபிள்ளையார் குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப் பகுதியில் அவரை வழி மறித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலிற்குள்ளானவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு...

2026-09-15 06:09:07
news-image

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் ...

2026-09-15 06:02:52
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட...

2026-09-15 06:00:26
news-image

தித்வா அனர்த்த நட்டஈட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக...

2026-09-15 05:57:44
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09