2020ஆம்  ஆண்டில் இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் ஏப்ரல் இறுதி வாரத்­தி­லோ அன்றேல் மே மாத ஆரம்­பத்­தி­லோ நடை­பெறும் வாய்ப்­புக்கள் உள்­ளன. கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லை­யொட்­டிய பிர­சா­ரங்­களை அலசி ஆராய்­கின்­ற­போது பெரு­ம­ள­வா­னவை சமூக ஊடகப் பரப்­பி­லேயே கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தன. 

2010ஆம் ஆண்டு தேர்­த­லுக்கு பின்­னரே இலங்­கை­யி­லுள்ள அர­சி­யல்­வா­திகள் சமூக ஊட­கங்­களைப் பாவிக்கத் தொடங்­கினர். அப்­போது ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த  மஹிந்த ராஜ­பக் ஷ வெகு­சனத் தொடர்­பு­க­ளுக்­கான ஓர் பொறி­மு­றை­யாக பேஸ்புக் தளத்தை முதலில் பாவிக்­கத் ­தொ­டங்­கினார். உண்­மையைக் கூறு­வ­தாயின், 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போதே இலங்­கையில் தேர்­த­லொன்றில் சமூக ஊட­கங்கள் வெளிப்­ப­டை­யான பாத்­தி­ர­மொன்றை வகித்­தி­ருந்­தன. அந்த தேர்தல் கால­கட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியை சமூக ஊட­கங்­களில் கணி­ச­மா­ன­வர்கள் பின்­தொ­டர்ந்­தி­ருந்த போதிலும் கூட அவ­ரது எதிர்த்­த­ரப்­பி­னரோ இல­கு­வாக அணு­கக்­கூ­டிய இணை­யத்தின் திறந்­த­தன்­மையை பயன்­ப­டுத்தி அப்­போது அரச ஊட­கங்கள் மீதும் சில தனியார் ஊட­கங்கள் மீதும் அவர் கொண்­டி­ருந்த இரும்புப் பிடியை முறி­ய­டிப்­ப­தற்கு சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் தொடக்கம் தற்­போ­துள்ள காலப்­ப­கு­தியில் தேசிய தேர்­தல்­களில் சமூக ஊடகம் என்­பது பிர­தான ஒரு விட­ய­மாக பரி­ண­மித்து நிற்­கின்­றது. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்கள் இல்­லாமல் இருந்­தி­ருந்தால் 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்தில் இடம்­பெற்ற அர­சியல்  சாசன நெருக்­கடி மிகவும் வித்­தி­யா­ச­மாக கையா­ளப்­பட்­டி­ருக்கும். பிர­த­மரைப் பதவி நீக்கம் செய்­த­மைக்கு எதி­ரா­ன­வர்கள் தமக்­கா­ன­தொரு பொது­மே­டையை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு சமூக ஊட­கங்­களே கள­ம­மைத்­துக்­கொ­டுத்­ததை மறந்­து­வி­ட­மு­டி­யாது என்ற கருத்தை அண்­மையில் பிர­பல ஊட­க­வி­ய­லாளர் அமந்த பெரேரா தனது கட்­டு­ரை­யொன்றில் பதி­வு­செய்­தி­ருந்தார். சமூக ஊட­கங்­களின் வரவு, அர­சாங்­கங்கள் செய்தி மீது கொண்­டி­ருந்த ஒரு­வி­த­மான ஏக­போ­கத்­தன்­மையை அன்றேல் இரும்­புப்­பி­டியை கணி­ச­மா­ன­ளவில் தளர்த்­து­வ­தற்கு வழி­கோ­லி­யது.

கடந்­தாண்டு அர­சி­ய­ல­மைப்பு நெருக்­க­டியைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­ன­போது அவ­ரது பத­வி­யேற்பு தொடர்­பான செய்தி இந்த நாட்­டி­லுள்ள 21மில்­லியன் மக்­க­ளுக்கு ஒரு டுவீட் செய்தி மூல­மா­கவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. பத­வி­யேற்பு நிகழ்வை படம்­பி­டிப்­ப­தற்கு ஊட­கங்­­க­ளுக்கு ஜனா­தி­பதி தடை­வி­தித்த ஒரு நிலை­மையை எதிர்­கொண்ட ஒரே நாடாக இலங்­கையே இருந்­தி­ருக்க வாய்ப்­புண்டு. அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த அமைச்­சர்­களும் ஏனை­ய­த­ரப்­பி­னரும் தமது திறன்­கை­பே­சி­களை பயன்­ப­டுத்தி வெளி­யி­லுள்ள மக்­க­ளுக்கு என்ன நடை­பெ­று­கின்­றது என்­பதை தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். திறன்­கை­பே­சி­களோ அன்றேல் டுவிட்­டரோ அன்றேல் இவ்­வி­ரண்­டுமோ இல்­லாமல் இருந்­தி­ருந்தால் நிலைமை எப்­ப­டி­யி­ருந்­தி­ருக்கும் எனக் கற்­பனை செய்­து­பா­ருங்கள். 

அர­சி­யல்­சா­சன நெருக்­க­டிக்கு முன்­னரும் பின்­னரும் அர­சாங்கம் சமூக ஊட­கங்­களை முடக்­கி­ய­தனை நாம் கண்­ணுற்­றுள்ளோம். திகண கல­வ­ரத்­தை­ய­டுத்து 2018 மார்ச் மாதத்தின் முத­லிலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்தும் சமூக ஊட­கங்கள் முடக்­கப்­பட்­டி­ருந்­தன.

சமூக ஊட­கங்கள்  இலங்­கையர்  மீது எங்­ஙனம் தாக்கம் செலுத்­து­ கின்­றன என்­பது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்­வ­மான ஆய்­வுகள் இல்­லை­யென்ற போதிலும் இலங்­கை­யி­லுள்ள 21 மில்­லியன் சனத்­தொ­கையில் 7 மில்­லியன் மக்கள் அதா­வது 30 வீத­மா­ன­வர்கள் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர். என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.  ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான பேஸ்புக் ரசி­கர்­களைக் கொண்ட இசைக்­க­லைஞர் ஈராஜ் வீர­ரத்ன தனது பதி­வு­க­ளூ­டாக கோத்­தா­பயவுக்கு ஆத­ரவைச் சேர்க்கும் நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதித் தேர்­தலின் போது முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

இதே­போன்று இன்ஸ்­டா­கிராம் தளத்தில் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மா­ன­வர்­களை ரசி­கர்­க­ளாக கொண்­டுள்ள இலங்கை மொடல் ஒருவர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்ட போது அதற்கு ஆத­ர­வாக பதி­விட்­டி­ருந்தார். இன்­னு­மொரு பிர­பல யூடியூப் பய­னாளர் போலி தேர்தல் பெறு­பேறு உட்­பட பல்­வேறு தில்­லு­முல்­லுகள் நிறைந்த வீடி­

யோவை வெளி­யிட்­ட­போது அதற்கு ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான லைக்­குகள் கிடைத்­தன. அப்­ப­டி­யான ஆத­ர­வுப்­ப­தி­வுகள் சமூக வலைத்­த­ளங்­களில் இனி­வரும் காலத்­திலும் அடிக்­கடி வர வாய்ப்­புக்கள் உள்­ளன.

பொது தளம் என்­பது தற்­போது இவ்­வா­றான திரு­கு­தா­ளங்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கி­ட­மா­னது. வர­வர இத்­த­கை­ய­வர்­களின் செயற்­பா­டு­களை தொடர்ச்­சி­யாக அவ­தா­னத்தில் வைத்­தி­ருப்­பதும் அவர்கள் ஒழுங்­கு­வி­தி­களைப் பின்­பற்றி நடக்­கின்­ற­னரா என பார்ப்­பதும் கடி­ன­மா­கிக்­கொண்­டு­வ­ரு­கின்­றது.  எந்­த­வொரு தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­களும் போலி­யான தேர்தல் பெறு­பே­று­களை ஒளி­ப­ரப்­ப­மாட்­டாது. ஏனெனில் தெளி­வான சட்­ட

ங்­களும் ஒழுங்­கு­களும் அவர்­க­ளுக்­கென முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் யார் யூடியூப் வீடியோ தொடர்பில் பொறுப்­புக்­கூ­று­வது? யூடியூப் தள­மா­னது அதில் உள்­வாங்­கப்­படும் வீடி­யோக்­க­ளி­லுள்ள விட­ய­தானம் தொடர்­பாக எவ்­வி­த­மான பொறுப்­புக்­க­ளையும் எடுத்­துக்­கொள்­ளாத ஒரு­த­ள­மா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான விட­ய­தானம் என்­பது பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக இருந்­தாலும் கூட அது­தொ­டர்­பாக மக்­களின் அதி­க­ரித்த முறைப்­பா­டு­களின் மத்­தி­யி­லேயே நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஆனால் அதற்­குள்­ளாக ஒரு மில்­லியன் பேர் அதனைப் பார்­வை­யிட்­டு­விட்­டனர் என்­பது கரி­ச­னையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அண்­மையில் கிழக்கு மாகா­ணத்தின் பாண­மயில் அமைந்­துள்ள முஹூது மகா விகாரை என்ற பௌத்த ஸ்தானத்தில் புத்தர் சிலைகள் உடைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஈராஜ் உட்­பட சிலர் பெரும் பிர­சா­ரத்தை சமூக ஊட­கங்கள் மற்றும் பாரம்­ப­ரிய ஊட­கங்கள் மூலம் முன்­னெ­டுத்து சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்த முற்­பட்­டனர். ஆனால் பத்தும் கேனர் என்ற சுயா­தீன ஊட­க­வி­ய­லாளர் அங்கு நேரில் சென்று இடத்தைப் பார்­வை­யிட்டு அங்­குள்ள பௌத்த தேரரை நேர்­காணல் செய்து உண்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அந்த சிலைகள் நிற்கும் நிலையில் வைக்­கப்­ப­டு­வ­தற்­காக தற்­போது தரையில் கிடப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளதே தவிர அவை உடைக்­கப்­ப­ட­வில்லை என்­பதே அவர் வெளிப்­ப­டுத்­திய உண்மை. தேர்­தல்­கா­லத்தில் இவ்­வா­றான போலிச் செய்­தியின் உண்­மை­யான பக்கம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டா­விடின் மக்­களின் அச்­சங்­களில் குளிர்­காய நினைப்­ப­வர்­க­ளுக்கு அது அனு­கூ­ல­மாக அமைந்­து­விடும்.

சமூக ஊட­கங்­களைக் கண்­கா­ணித்து பிரச்­சி­னைக்­கு­ரிய பதி­வுகள் தொடர்­பாக முறைப்­பாடு செய்­ய­வுள்­ள­தாக இலங்­கையின் தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் ஜனா­தி­பதித் தேர்தல் காலப்­ப­கு­தியில் உறு­தி­ய­ளித்­த­போதும் அவர்­களால் எத­னையும் பெரி­தாகச் செய்­ய­மு­டி­ய­வில்லை. போலிச் செய்­திகள் மற்றும் காழ்ப்­பு­ணர்­வு­மிக்க மோச­மான பதி­வு­களை கண்­கா­ணித்தல் மற்றும் அவற்றை நீக்­குதல் தொடர்­பாக இலங்­கையின் தேர்­தல்கள் ஆணைக்குழு பேஸ்புக் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல்களை நடத் திய போதும் ஜனாதிபதித் தேர்தலில் பேஸ்புக் மூலமான போலிச் செய்திகளையோ வெறுப்புப் பதிவுகளையோ நீக்க முடியவில்லை. நடைமுறையில் இதனைச் செய்வது எந்த வகையிலும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  விரைவாக இவற்றை இனங்கண்டுபிடிப்பதற்கு உரிய வளங்கள் உள்ளனவா என்பது முக்கியவிடயமாகும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே அவை ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சொற்தாக்குதல்களால் நிறைந்து கிடக்கின்றன.

இந்த பதிவுகளுக்கு எதிராக எந்தவிதமான வினைத்திறன்மிக்க தடுப்புச் செயற்பாடுகளையும் காணமுடியவில்லை. கடந்த காலத்தைப் போன்று அவற்றை இனங்காண்பதும் ஆவணப்படுத் துவதும் மட்டும் போது மானதல்ல. தற்போது அதனையும் தாண்டிய நகர்வுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும்.

- அருண் ஆரோக்கியநாதன்