அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொழிற்துறைகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு விரிவான திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தத் துறைமுகத்தை நிர்வகிக்கும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் ஒரு துணை நிறுவனமான அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகளின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவீந்திர ஜயவிக்கிரம கூறியிருக்கிறார்.
தகுதிவாய்ந்த சர்வதேச கம்பனிகள் குழுமம் ஒன்றினால் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த விரிவான திட்டத்தை வரையும் பணிகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாகவும் பல்வேறு இலகு, கனரக மற்றும் உணவுத் தொழிற்துறைகளை முன்னெடுப்பதற்குத் துறைமுகத்திற்குள் இருக்கும் சில பகுதிகளை ஒதுக்குவது குறித்துப் பரிந்துரைக்கப்படுகிறது என்றும் வெளிநாட்டுச் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த நேர்காணலில் ஜயவிக்கிரம கூறியிருக்கிறார்.
திட்டவரைவுப் பணிகள் பூர்த்தியானதும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் சர்வதேச சந்தைக்குச் செல்லும். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் சுதந்திர துறைமுகக் கொள்கை உலகின் சந்தடிமிக்க கப்பல் போக்குவரத்துப் பாதைகள் துறைமுகத்திற்குத் தொற்கே ஒருசில கடல் மைல்கள் தொலைவில் இருக்கின்ற அமைவும் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுப்பதற்கு வாய்ப்பாக அமையுமென்று நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM