முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணி நேரத்திற்கும் மேல் விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 21/4 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.