தமிழ் மக்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெளிப்­ப­டுத்­திய பிர­தி­ப­லிப்­புகள் காரணமாக, மேலும் அதி­கா­ரங்­களை பகிர்ந்தால் புலம்­பெ­யர்ந்­த­வர்கள் மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து பிரி­வினை நோக்கி சென்­று­வி­டு­வார்கள் என்ற அச்சம் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அதி­க­ரித்­துள்­ளது என்று லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வரும் வட­மத்­திய மாகாண ஆளு­ந­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்­ஸ­வி­தா­ரண வீர­கே­சரிக்கு வழங்­கிய செவ்­வி­யில் தெரி­வித்தார்.

அச் செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- முதலில் நீங்கள் கிழக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக இருந்­த­போதும் பின்னர் வட­மத்­திய மாகா­ணத்­துக்கு திடீ­ரென மாற்­றப்­பட்­ட­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- மூவி­னங்­க­ளையும் சமத்­து­வ­மாக கருதும் நான் கிழக்கு மாகா­ணத்தில் பணி­யாற்ற வேண்டும் என்று பலர் விருப்­பங்­களை வெளி­யிட்­ட­தோடு தமது வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்­தி­ருந்­தனர். கண்­டியைச் சேர்ந்த பெண்­ம­ணியே முதலில் வட­மத்­திய மாகா­ணத்­துக்கு நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது. எனினும், பௌத்த சம­யத்தின் புனித நக­ர­மான அநு­ரா­த­பு­ரத்தில் சமய நிகழ்­வு­களில் பங்­கேற்­பது உட்­பட சில நடை­முறைச் சிக்­க­லான பிரச்­சி­னைகள் காணப்­பட்­ட­மையால் பௌத்த தேரர்கள் அவ­ரது நிய­ம­னத்­தினை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி­னார்கள். அத­னை­ய­டுத்து பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவும் தமது நிலை­மையைக் கூறி என்னை உத­வி­செய்­யு­மாறு கோரி­னார்கள். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே நான் அந்த மாகா­ணத்­துக்­கான பொறுப்­பினை ஏற்­றுக்­கொண்டேன்.

கேள்வி:- “பொரு­ளா­தார சமத்­து­வமே அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வாக அமையும்” என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய கூறி­யி­ருக்­கின்­ற­போதும் நாட்டின் தற்­போ­தைய பொரு­ளா­தார நிலை­மை­களை வைத்­துப் ­பார்க்­கையில் அந்த இலக்­கினை அடைய முடி­யுமா?

பதில்:- போர் நிறை­வுக்கு வந்து சொற்­ப ­கா­லத்­தி­லேயே வடக்கு, கிழக்கு பகு­தி­களை துரி­த­மாக மேம்­ப­டுத்­து­வ­தற்கு விசேட செயற்­றிட்டம் தயா­ரிக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அத­னை­வி­டவும் 15சத­வீ­த­மான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு அபி­வி­ருத்தி திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அந்த விட­யங்­க­ளை­யெல்லாம் தமிழ் மக்கள் மறந்து விட்­டார்கள். அமெ­ரிக்­காவின் கைக்­கூ­லி­யாக இருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பங்­கா­ளி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பொய்­யான பிர­சா­ரங்­க­ளுக்கும், புலம்­பெ­யர்ந்­த­வர்­களின் தவ­றான வழிப்­ப­டுத்­தல்­க­ளுக்குள் அகப்­பட்டு தமது வாக்­குகளை அளித்­துள்­ளார்கள். ஆகவே தமிழ், முஸ்லிம் மக்கள் ஆட்­சியில் அமர்­வ­தற்கு தனக்கு உத­வ­வில்லை என்ற மன­நி­லையில் ஜனா­தி­பதி உள்ளார். இருப்­பினும், அனைத்­தையும் மறந்து இணைந்து பணி­யாற்­று­வ­தற்­காக தனது வாயில்கதவு திறந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். ஆகவே  அந்த சந்­தர்ப்­பத்­தினை பயன்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. மேலும் தற்­போ­தைய சூழலில் ஏற்­று­மதி வரு­மா­னத்­தினை விடவும் இறக்­கு­மதி செல­வீனம் இரட்­டிப்­பா­கி­யுள்­ளது.

எனவே முத­லீ­டு­களை உடன் ஏற்­ப­டுத்­து­வ­தோடு நிலை­யான பொரு­ளா­தாரக் கொள்­கையை உரு­வாக்­குவ­தற்­கு­­மான திட்­ட­மி­டல்கள் உள்­ளன. உட­ன­டி­யாக பொரு­ளா­தார நிலை­மை­களில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வதில் சிக்­கல்கள் இருந்­தாலும் இலக்­கினை நோக்­கிய நடை­மு­றைச்­சாத்­திய செயற்­றிட்­டங்கள் படிப்­ப­டி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன

கேள்வி:- அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வாக பொரு­ளா­தார சமத்­து­வத்தை முன்­னி­லைப்­ப­டுத்தும் ஜனா­தி­பதி கோத்­தா­பய அதி­கா­ரப்­ப­கிர்வு அவ­சி­ய­மில்லை என்று கூறி­யுள்­ள­மையை புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சினை தீர்வு செயற்­பாட்டில் பல்­வேறு வகி­பா­கங்­களை கொண்­டி­ருந்த நீங்கள் எவ்­வாறு பார்­க்கின்­றீர்கள்?

பதில்:- ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ், முஸ்­லிம்­களின் பிர­தி­ப­லிப்­புக்­களின் அடிப்­ப­டையில் புதிய ஜனா­தி­பதி உள்­ளிட்ட ஆட்­சி­யா­ளர்கள் ஆழ­மாக சிந்­திக்கும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். சமஷ்டி முறை­யி­லான அதி­கா­ரப்­ப­கிர்வு மட்­டு­மல்ல எந்­த­வொரு அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிப்­பது குறித்தும் சாத­க­மாக சிந்­திக்கும் நிலையில் இல்லை என்­பதை அவர்­க­ளுடன் உரை­யா­டிய போது என்னால் உணர முடிந்­தது.

அதா­வது, தற்­போ­துள்ள அதி­கா­ரங்­க­ளுக்கு அதி­க­மான அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டால், சர்­வ­தேச தரப்­புக்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து சமஷ்டி முறை­மையை பெறு­வ­தோடு அவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் பிரிந்து செல்­வ­தற்கும் முயற்­சிப்­பார்கள் என்ற அச்சம் காணப்­ப­டு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

23ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்­துக்கு ஜனா­தி­ப­தி­யுடன் வருகை தந்­தி­ருந்த ஆலோ­சகர் லலித் வீர­துங்­க­வி­டத்தில் அதி­கா­ரப்­ப­கிர்வு விடயம் குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மட்­டு­மல்ல ஒட்­டு­மொத்த மாகாண சபை­க­ளுக்கும் ஒதுக்­கப்­படும்  நிதியில் 60சத­வீ­த­மா­னவை முத­ல­மைச்சர், அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள், அதி­கா­ரிகள் ஆகி­யோரின் கொடுப்­ப­ன­வுகள் உள்­ளிட்ட இதர செல­வீ­னங்­க­ளுக்கே செல்­கின்­றன.

ஆகவே பொது­மக்­க­ளுக்­கான சேவையில் குறைந்த பட்­ச­மான பங்­க­ளிப்­பினைச் செய்யும் அம்­மு­றைமை அவ­சி­யமா என்ற கேள்­வி­களும் உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார். ஆகவே அந்த விடயம் சம்­பந்­த­மாக உரிய தர­வு­களும் அவர்­க­ளி­டத்தில் உள்ள நிலையில் அடுத்த கட்டம் குறித்து விரைவில் கலந்­து­ரை­யா­டல்கள் செய்­யப்­படும் என்று கரு­து­கின்றேன்.  

கேள்வி:-  மாகாண சபை முறை­மையை கைவிடும் நிலைப்­பாட்டில் ஜனா­தி­பதி கோத்­தா­பய உள்ளாரா?

பதில்:- அப்­ப­டி­யில்லை, அவ­ரைப்­பொ­றுத்­த­வ­ரையில் சமா­தானம், நல்­லி­ணக்கம், தேசிய பாது­காப்பு ஆகி­ய­வற்றை அனைத்து இனக்­ கு­ழுக்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்றி பெற்­றுக்­கொ­டுப்­ப­தோடு பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுப்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக உள்­ளது. தான்  ஆட்சி அதி­கா­ரத்­தினை பெறு­வ­தற்­காக வழங்­கிய வாக்­கு­று­தி­களை இலங்­கை­யர்­க­ளுக்­காக நிறை­வேற்­று­வ­தையே இலக்­காக கொண்­டி­ருக்­கின்றார். குறிப்­பாக மக்கள் சேவைக்­காக கிரா­மிய சபை­களை கட்­ட­மைத்து அதன் ஊடாக மக்கள் நலத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முனைப்­புக்­காட்­டி­யுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்­டி­ருந்த வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்­க­ப்பட்­டி­ருந்த நிதியில் 30சத­வீதம் மட்­டுமே மக்­க­ளுக்­காக செலவு செய்­யப்­பட்­ட­தோடு 70சத­வீ­த­மா­னது மீளத்­தி­ருப்பி அனுப்­பப்பட்­டுள்­ளது. ஆகவே அந்த விட­யத்­தையும் கவ­னத்தில் கொள்­கின்­ற­போது தற்­போ­தைய அதி­கா­ரங்­க­ளுக்கு அதி­க­மாக அதி­கா­ரப்­ப­கிர்வு அவ­சியம் என்ற நிலைப்­பாட்டில் உள்ள என்­னாலே எதுவும் கூற முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி:- அவ்­வா­றாயின் நீங்­களும் அதி­கா­ரப்­ப­கிர்வு அவ­சி­யமில்லை என்ற நிலைப்­பாட்­டினை ஆத­ரிக்கும் சூழ­லுக்குள் தள்­ளப்­பட்டு விட்­டீர்­களா?

பதில்:- நான் தற்­போதும் அதி­கா­ரப்­ ப­கிர்வு அவ­சியம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே உள்ளேன். அதி­கா­ரங்­களைப் பெறு­ப­வர்கள் தமக்கு ஆணை வழங்­கி­ய­வர்­க­ளுக்­காக செயற்­பட வேண்டும். அவர்கள் அத­னைப் ­ப­யன்­ப­டுத்தி சுரண்­டல்­களைச் செய்­கின்­ற­மையை அனு­ம­திக்க முடி­யாது.

கேள்வி:- மாகாண சபை முறை­மையை கைவி­டு­கின்ற அல்­லது மாற்­றி­ய­மைக்க முற்­ப­டு­கின்ற சூழல் ஏற்­ப­டு­கின்­ற­போது அம்­மு­றைமை உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மாக இருந்த அயல்­நா­டான இந்­தி­யாவால் அழுத்­தங்கள் ஏற்­ப­டு­மல்­லவா?

பதில்:- இந்­தி­யா­வினால் அவ்­வா­றான அழுத்­தங்கள் ஏற்­ப­டலாம். ஆனால் இந்­தி­யாவின் தற்­போ­தைய அர­சாங்­க­மா­னது அமெ­ரிக்­காவின் கைப்­பொம்­மை­யாக உள்­ளது. இந்­தியா சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டு­கின்­ற­போது சீனா போன்று விரை­வான முன்­னேற்­றத்­தினைக் காணும் சக்­தியைக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் இந்­தியப் பிர­தமர் மோடி அமெ­ரிக்­காவின் தேவை­களை நிறை­வேற்றும் வகையிலும், இந்­துத்­து­வாவின் பெயரில் மத­வாதத்­தி­னையும் இன­வா­தத்­தி­னையும் கையி­லெ­டுத்து செயற்­ப­டு­கின்றார்.

இதனால் அவ­ரு­டைய ஆட்­சியின் மீது மக்கள் அதி­ருப்தி அடைந்­துள்­ளனர். ஆகவே நாம் இந்­தி­யா­வுக்கோ அமெ­ரிக்­கா­வுக்கோ அடி­ப­ணி­யப்­போ­வ­தில்லை. எமது மக்கள் ஆணையின் அடிப்­ப­டையில் அந்­த­மக்­களின் தேவைகள் பற்றி ஆராய்ந்து நாமே தீர்­மா­னங்­களை எடுத்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம். அதில் இரு­வேறு கருத்­துக்கே இட­மில்லை.

கேள்வி:- ஆட்சிப் பொறுப்­பேற்று சொற்­ப­கா­லத்­தி­லேயே ஜனா­தி­பதி கோத்­தா­பய அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு இட­மில்லை என்று கூறி­யி­ருப்­ப­தா­னது 70வரு­ட­மாக அபி­லா­ஷை­களை கோரி­வரும் தமிழ் மக்­களை மேலும் அதி­ருப்­­தி­ய­டையச் செய்­வ­தோடு அவ­ரி­டத்­தி­லி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தற்கும் வழி­ச­மைப்­ப­தாக இருக்­கின்­றதே?

பதில்:- நான் உங்­க­ளுக்கு ஒரு உதா­ரண கருத்­தினை முன்­வைக்­கின்றேன். என்­னி­டத்தில் ஆளுநர் பதவி ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலையில் எமது மாகா­ணத்­தி­லுள்ள அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை மக்கள் பிர­தி­நி­திகள் விட­ய­தா­னங்கள் பற்றி என்­னுடன் கலந்­து­ரை­யா­டாது எனது கன்­னத்தில் அறைந்­து­விட்டுச் சென்­றதன் பின்னர் நான் அவர்கள் பற்றி சாத­க­மாக சிந்­திப்­பேனா, ஒரு­போதும் நடக்­கா­தல்­லவா? அது­போன்று தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு மாகா­ணத்தில் நூற்­றுக்கு 40சத­வீ­த­மா­ன­வர்கள் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை ஆத­ரிக்கும் நிலை­மைகள் இருந்­தன.

எனினும், முத­லை­க­ளுக்கு மனி­தர்­களை இரை­யாக்­கப்­பட்­ட­தாக ராஜித பொய்­களைக் கூறி தமிழ் மக்­களை ஏமாற்­றினார். அதற்குள் அகப்­பட்ட தமிழ் மக்­களும் முட்­டாள்­த­ன­மான முடி­வு­களை எடுத்து ஜனா­தி­ப­திக்கு எதி­ராக பிர­தி­ப­லித்­துள்­ளார்கள். ஆகவே அவர்கள் பற்றி உடன் சாத­க­மாக சிந்­திக்கும் மன­நிலை அவ­ருக்கு ஏற்­படும் என்று எவ்­வாறு எதிர்­பார்க்க முடியும். அவரும் சாதா­ரண மனி­தரே. ஆகவே தான் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்ள எனக்கே ஜனா­தி­ப­தி­யுடன் அது­பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு கூட நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன.

கேள்வி:- தமிழ் மக்­களின் ஆணை­பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் எதிர்­கா­லத்தில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­திய நிலை­மைகள் இருக்­கின்­ற­னவா?

பதில்:- தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களைத் தெரி­வு­செய்­தி­ருந்­தாலும் அவர்கள் அமெரிக்காவி­னதும், புலம்­பெயர் அடிப்­ப­டை­வா­தி­க­ளி­னதும் பிர­தி­நி­தி­க­ளா­கவே உள்­ளனர். மேலும் எமது நாட்டின் வளங்­க­ளை­ சு­ரண்டி தமது நலன்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள விளையும் தரப்­பி­ன­ருக்காக செயற்­ப­டு­ப­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்க வேண்­டி­யதன் அவ­சியம் தான் என்ன?

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் தமிழ் மக்­களின் தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் தொடர்பில் யாருடன் கதைப்­ப­தற்கு தயாராக இருக்­கின்­றீர்கள்?

பதில்:- வடக்கில் உள்ள ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்சி, தமிழர் ஜன­நா­யக சமூக கட்சி, ஸ்ரீரெலோ கிழக்கு மாகா­ணத்தில் உள்ள தமிழ்க் கட்­சிகள் மற்றும் முற்­போக்கு சிந்­த­னை­யு­டைய தரப்­புக்கள் ஆகி­ய­வற்­றுடன் லங்கா சம­ச­மா­ஜக்­கட்­சியும் கூட்­டி­ணைந்து தமிழ் மக்­களின் விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­க­ளையோ பேச்­சுக்­க­ளையோ முன்­னெ­டுப்­ப­தற்கு தயா­ரா­கவே உள்ளோம்.

தேசிய ரீதியில் பரந்­து­பட்ட கூட்­ட­ணியில் உள்ள அர­சியல் கட்­சி­க­ளு­ட­னேயே தமிழ் மக்கள் இணைந்து பய­ணிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். அவ்­வா­றில்­லாது, எமது நாட்டின் பிர­தான எதி­ரி­களை ஆத­ரிப்­பதால் எவ்­வி­த­மான பயனும் கிடைக்­காது. ஆகவே தமிழ் மக்கள் தமது மன­நி­லையை மாற்­றி­ய­மைத்து அடுத்த தேர்­தல்­களில் ஆணை வழங்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

மேலும் நாம் அனைத்து சமூ­கங்­க­ளையும் ஒன்­றி­ணைத்தே பய­ணிக்­கின்றோம். ஆட்சி அதி­கா­ரத்­துக்கு ஆணை வழங்­கிய தரப்­புடன் அதிகமாக இணைந்து பணி­யாற்­ற­வேண்­டிய நிலை­மைகள் ஏற்­ப­டு­கின்ற போது எம்மை இன­வா­திகள் என்று தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் சித்­த­ரிக்­கின்­றார்கள். அவ்­வா­றான சித்­த­ரிப்பின் ஊடாக தமிழ் மக்­களை ஏமாற்றி தேர்­தலில் இலா­ப­மீட்­டு­வ­தையே இலக்­காக கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வா­றான செயற்­பா­டு­களால் தமிழ் மக்­க­ளி­டத்தில் இருந்து எம்­போன்­ற­வர்கள் அந்­நி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள். ஆகவே சரி­யான மன­நி­லையில் இருந்து தமிழ் மக்கள் சிந்­திக்க கட­மைப்­பட்­டுள்­ளார்கள். அதன்­மூ­லமே தமிழ் மக்கள் தமக்­கான சிறந்த எதிர்­கா­லத்­தினை அமைத்­துக்­கொள்ள முடியும்.

கேள்வி:- ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து  வில­கு­வ­தென புதிய ஆட்­சி­யா­ளர்கள் உறு­தி­யாக தீர்­மா­னித்து விட்­டார்­களா?

பதில்:- சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு அமை­வாக ஒரு நாட்டில் உள்­நாட்டு போர் இடம்பெற்றால் அது சம்பந்தமான ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலான தீர்மானிக்கும் அதிகாரமானது மக்கள் ஆணைபெறும் அந் நாட்டு அரசாங்கத்துக்கே உள்ளது. அதில் வெளியாரின் தலையீடுகளுக்கு இடமில்லை.  அத்துடன் ஐக்கிய நாடுகளின் சகல சமவாயங்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் உள்நாட்டு போர் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானத்தினை முன்மொழிந்தமையே தவறாகும்.

வியட்நாம், கியூபா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இடதுசாரித்துவ கட்சிகள் என்ற அடிப்படையில் எமக்கு நெருக்கமான உறவுகள் இருக்கின்றன. அதன் பிரகாரம் அமெரிக்காவினால் இலங்கை குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டபோது அதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்குரிய இணக்கப்பாட்டினை அந்தந்த நாடுகளுடன் மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றை பங்காளிகளாக கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு துரோகமிழைத்து அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது.

கேள்வி:- போரின்போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரி நிற்கின்றார்களே?

பதில்:- இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை கூறிவிட்டார். மேலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் 12ஆயிரம் பேரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகமயப்படுத்தியுள்ளோம். பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களைக் கூட பொதுமன்னிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக விடுவித்திருக்கின்றோம். ஆகவே இல்லாதவொரு விடயத்தினை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதால் நல்லிணக்கம் பற்றி சிந்திக்க முடியுமா? பெரும்பான்மை சிங்கள மக்களின் சந்தேகங்களை களைய முடியுமா?

- நேர்காணல் ஆர்.ராம்