முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி தலைவரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நடைபெறவுள்ளதுடன் இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.