தலைவர் அஷ்­ரபின் மர­ணத்­துக்கு பின்னர் முஸ்லிம் தேசிய கோட்­பாடு மறக்­கப்­பட்­டது - ஹசன்அலி

30 Dec, 2019 | 12:26 PM
image

பெருந்­த­லைவர் அஷ்­ரபின் மர­ணத்­துக்கு பின்னர் முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் தலை­வர்­களும் முஸ்லிம் தேசிய கோட்­பாட்டிலிருந்து விலகி அவர்­க­ளுக்கென்று சாம்­ராஜ்ய வட்­டங்­களை உரு­வாக்க தொடங்கி முஸ்லிம் அர­சி­யலை வியா­பார அர­சி­ய­லாக மாற்­றினர் என்று ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாய­கமும் சுகா­தார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஹசன்அலி தெரி­வித்தார்.


ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் சம்­மாந்­துறை மத்­திய குழுவின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு  கடந்த வெள்­ளிக்­கி­ழமை சமா­தான கூட்­ட­மைப்பின் சம்­மாந்­துறை பிர­தேச அமைப்­பாளர் எம். எல். நாஸரின் தலை­மையில் அவரின் இல்­லத்தில் இடம்­பெற்­றது.


இந்­நி­கழ்வில்  பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு  உரை­யாற்­றிய அவர்   மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் இரண்டு வருட பய­ணத்தின் பின் சம்­மாந்­துறை  மண்ணில் ஒரு கிராம மட்ட மத்­திய குழுவை நிறு­வு­வ­தற்கு போது­மான அளவு இன்று வளர்ச்சியடைந்­துள்ளோம் என்­பதையிட்டு நான் பெரு­ம­கிழ்ச்சி அடை­கிறேன். இந்த நிகழ்வு எனது ஆரம்ப கால முஸ்லிம் காங்­கி­ரஸின் சம்­மாந்­து­றைக்­கான கட்சி நட­வ­டிக்­கை­களை மீட்டுப் பார்க்க செய்­கி­றது.
நான் அப்­போது சம்­மாந்­துறை தொழில்­நுட்ப கல்­லூ­ரியில் ஒரு விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்றிக் கொண்­டி­ருந்தேன்.    


எனது மாண­வர்­க­ளான ஒரு சில­ரு­டன்தான் முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி இந்த மண்­ணுக்கு கொண்டு வரப்­பட்­டது.  அந்த மாண­வர்கள் முஸ்லிம் காங்­கிரஸ் பத்­தி­ரி­கை­களை விற்று கொள்­கை­களை பரப்ப உத­வி­னார்கள். 
எமது இன அடை­யா­ளத்தை சகோ­தர இனத்­த­வர்கள் அங்­கீ­க­ரிக்க மறுத்­தனர். அதன் கார­ண­மாக எமது தேசிய அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­தவே நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை தோற்­று­வித்தோம்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் தென்­ப­குதி தமிழ்ப் பேசும் மக்­களின் நிர்­வாக வச­திகள் கருத்தில் கொள்­ளப்­பட்டு  ஒரு மாவட்­ட­மாக  உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் எமது அன்­றைய மக்கள் பிர­தி­நி­திகளின் அச­மந்த போக்கு கார­ண­மாக  மட்­டக்­க­ளப்பு தென்­ப­கு­தி­யுடன் பிந்­த­னப்­பற்று போன்ற பிர­தே­சங்­களும் சேர்க்­கப்­பட்டு அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. 


அவ்­வா­றான தவ­று­களை கண்­டித்து தலைவர் அஷ்ரப் கரை­யோர மாவட்­டத்தை மையப்­ப­டுத்தி முஸ்லிம் சமூ­கத்தின் இருப்­புக்­கான அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுத்தார். எதிர்க்­கட்சி அர­சியல் மூல­மா­கவும் ஆளும்கட்சி அர­சியல் மூல­மா­கவும் இதற்கு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அன்­னாரின் திட்­ட­மி­டப்­பட்ட  படு­கொலை எம் சமூக இலக்கை முடக்­கி­விட்­டது. அதன் பின்னர் வந்த கட்­சி­களும்  தலை­வர்­களும் முஸ்லிம் தேசிய கோட்­பாட்டிலிருந்து விலகி தங்கள் சாம்­ராஜ்ய வட்­டங்­களை உரு­வாக்க தொடங்கி முஸ்லிம் அர­சி­யலை ஒரு வியா­பார அர­சி­ய­லாக மாற்­றினர். 


இன்று முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்பு தலைவர் அஷ்ரப் உரு­வாக்­கிய யாப்பு அல்ல. இப்­போது இருப்­பது வெறும் சக்கை மாத்­தி­ரமே. தலைவர் அஷ்­ரபின் கட்­ட­மைப்பு  இன்­றைய முஸ்லிம் காங்­கி­ரஸில் இல்லை. அர­சியல் பீடம் கலைக்­கப்­பட்டு உயர்­பீடம் 90 பேர் கொண்ட சபை­யாக மாற்­றப்­பட்டிருக்­கி­றது. அதில் 58 பேரை தலைவர் நிய­மிக்­கலாம் என்று வகுத்து ள்ளனர். அதி­காரம் உள்ள செய­லாளர் நீக்­கப்­பட்டு இந்த ஊரை சேர்ந்­தவர் பெய­ர­ள­வி­லான செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். இன்று அவரின் நிலை என்ன? என்று சிந்­தித்­து­ பா­ருங்கள்.  


ரவூப் ஹக்கீம் ஆயுள் கால தலை­வ­ராக இருப்­ப­தற்கு ஏற்ப கட்­சியை கம்பனி­யாக மாற்­றி­ய­த­னால்தான் நாம் வெளி­யேறி, எம்­முடன் வெளி­யே­றி­ய­வர்­க­ளுடன் சேர்ந்து இன்று ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பில் பய­ணிக்­கின்றோம். தலைவர் அஷ்­ரபின்  கொள்­கைகள் மர­ணித்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக தலைவர் அன்று உரு­வாக்கி கொடுத்த அதே யாப்பை ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் யாப்பாக கொண்டு இயங்குகின்றோம். ஒரே ஒரு மாற்றத்தை மாத்திரம் செய்துள்ளோம். அதாவது தலைவர் என்ற சொல்லுக்கு பதிலாக தலைமைத்துவ சபை என்று மாற்றியுள்ளோம். எமது முஸ்லிம் தேசியத்துக்கான பயணத்தில் தலைவரின் சிந்தனையில் உருவான கட்சி கட்டமைப்பை மீண்டும் உருவாக்கும் நோக்கில் இன்று நாம் சம்மாந்துறை மண்ணில் கூடியிருப்பது எமது பயணத்தின் இரண்டாம் பாகம் என்றே கூறவும் கொள்ளவும் வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33