இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; 3 பேர் படுகாயம் - முச்சக்கரவண்டி ஒன்று தீக்கிரை

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 12:02 PM
image

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கடை ஒன்றில் சூப் குடிக்க அருகிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினரும் அந்த பகுதியைச் சேர்ந்த குழுவினரும் சென்ற நிலையில் இரு குழுக்களுக்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,  

குறித்த பிரதேசத்திலுள்ள சூப் கடைக்கு அருகிலுள்ள கூளாவடி பிரதேசத்தைச் சோந்த குழுவினர் முச்சக்கரவண்டியில்  நேற்று இரவு 7 மணியளவில் சென்றுள்ளனர் இதன்போது அங்கு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர் சூப்குடிக்க சென்றுள்ளனர் 

இந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்தர்க்கத்தையடுத்து  மோதல் ஏற்பட்டது இதில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டு தீயில் எரிந்து முற்றாக சேதடைந்துள்ளது. 

இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து பொலிசார் அங்கு சென்ற நிலையில்  மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த மோதல் மதுபோதையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42