வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள் - ஆனந்தசங்கரி

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 11:41 AM
image

வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு காரணம் தமிழரசுக்கட்சியே! நிலைமை இவ்வாறிருக்கும்போது வடக்குகிழக்குக்கு வெளியே தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தயவுசெய்து அவர்களையாவது நிம்மதியாக வாழவிடுங்கள். 

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏதோ ஓரளவு வறுமையான வாழ்விலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் செம்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். அதுமட்டுமல்ல பலவருடங்களாக அரும்பாடுபட்டு உருவாக்கிய பல தொழிற்சங்கங்கள் இன்றும் அங்கு பலமாகவே இருக்கின்றன. காலத்திற்குக் காலம் மாறி மாறி வரும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மூலம் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுத் தங்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்கள்.அங்குள்ள தலைவர்கள் அந்த மக்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் பூர்த்திசெய்வார்கள்.

28 வருடங்களாக இயங்காமலிருந்த தமிழரசுக் கட்சியை தூசுதட்டி ஒருசிலரின் பதவிமோகங்களுக்காக விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் சாதித்தது என்ன? இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதேபோல சர்வதேசமே பார்த்து வியந்துபோன விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்துபோன போதும் அமைதியாக வேடிக்கைபார்த்துக் கொண்டு இருந்தார்கள். அத்துடன் முள்ளிவாய்க்கால் போரில் மக்களின் வாழ்வும்,சொத்துக்களும் நாசமாகியபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பலமான விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டது நல்ல விடயம் என்று இப்போதுதான் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். 

தந்தை செல்வா 1949ல் உருவாக்கிய தமிழரசுக்கட்சி வேறு. இப்போதுள்ள தமிழரசுக் கட்சிவேறு. 1972ல் தந்தை செல்வா ஜீ.ஜீ.பொன்னம்பலத்துடன் மலையகத் தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானுடனும் இணைந்து தலைமையைப் பகிர்ந்துகொண்ட கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி.

இந்த நிலையில் இன்றுள்ள தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் ஆமைபுகுந்த வீடாகிவிடக்கூடாது. 

நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப்பெற்றவர்கள் யாரேனும் ஒரு அரசியல் கைதியையாவது விடுதலை செய்ய முற்பட்டார்களா?

வடக்கு கிழக்குக்கு வெளியேவாழும் தமிழர்களை கை,கால்கள் சேதமடையாமல், துப்பாக்கிக்குண்டுகளுக்கும் இரையாகாமல் தான் உண்டு தன்வேலையுண்டு என இருக்கவிட்டாலே போதும். தமிழரசுக் கட்சி தன் இருப்பைத் தக்கவைக்க அந்த அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவீ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05