(எம்.ஆர்.எம்.வஸீம்)
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அடுத்த வருடத்துக்கான கணக்கறிக் கைத் திட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை அரசாங்கத்தின் செலவுகளுக்காக இடைக்கால கணக்கறிக்கைத் திட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிவரையான காலத்துக்கு அரசாங்கத்தின் செலவுகளுக்காக கடந்த ஒக்டோ பர் 23 ஆம் திகதி இடைக்கால கணக்கறிக் கையை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக்கொண்டிருந்தது.
என்றாலும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு, கடந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியை பெற்றுக்கொண்ட இடைக்கால கணக்கறிக்கைத் திட்டம் பயனில்லை என தெரிவித்தே, அடுத்த மாதம் புதிய இடைக்கால கணக்கறிக்கைத் திட்டம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருக் கின்றது.
அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையைப் பாராளுமன்றத்துக் குச் சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக் கொள்ளும் வரை, அடுத்த மாதம் இடைக்கால கணக்கறிக்கைத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி செயலாளர் டீ.பி. ஜயசுந்தர கடந்த 19ஆம் திகதி அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அனுப்பியிருந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் புதிய அரசாங்கத்துக்கு அடுத்த வருடத்துக்கான கணக்கறிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இடமளிக்கும் நோக்கத்திலே இடைக்கால கணக்கறிக்கைத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கத் தீர்மானித்திருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM