மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பௌத்த குரு ஒருவர் அதிக மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிய வண்ணம் இருந்ததை கண்ட பொலிஸார் பௌத்த குருவை கைது செய்துள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்ட பௌத்த குருவை கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்த போது அதிகளவான மது அருந்தியுள்ளதாக கூறியதற்கு அமைய இன்று 30ஆம் திகதியன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவை விசாரணை நடத்தியதற்கு அமைய கடந்த காலங்களில் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் பௌத்த பிக்குவாக இருந்ததாகவும் அதன் பின்னர் மாத்தளை பகுதிக்கு சென்றதாகவும்,தற்போது வாழச்சேனை பகுதியில் உள்ள விகாரையில் உள்ளதாகவும் அங்கு தற்போது புனர்தாபனம் செய்ய உள்ளதென அதிகளவான டிக்கட் புத்தகங்கள் வைத்திருந்ததாக நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவமானது நேற்று 29 ஆம் திகதியன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM