அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதாகும் பீட்டர் சிடில் 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 30.67 என்ற சராசரியில் 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், கடைசியாக நடந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்றார். 

20 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43.71 என்ற சராசரியில் 17 விக்கெட்டுக்களையும், 2 இருபதுக்கு - 20 போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுக்களையும் சாய்த்துள்ளார்.

67 டெஸ்ட் போட்டிகள் அவுஸ்திரேலியாவுக்காக ஆடியதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்த பீட்டர் சிடில், ஓய்வு பெறுவது சற்று வருத்தமாகவே உள்ளது என்றார்.