அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து போர் ஜெட் விமானங்களின் உதவியுடன் நேற்று இரண்டாம் நாளாகவும் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

விமானத்தை கொண்டுச் செல்லக்கூடிய யூ.எஸ்.எஸ்.  ஹெரி ட்ரூமன் என்னும் குறித்த போர்க்கப்பலானது தற்போது மத்திய தரைக்கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து நான்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 குறித்த இலக்கினை அடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.எஸ் அமைப்புக்கெரிதாக கடந்த 2 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் மத்திய தரைக்கடலில் இருந்து அமெரிக்க போர் கப்பலின் மூலம் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.