எலிக்காய்ச்சல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சுகாதாரப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது. 

தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையினால் எலிக்காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விசேட கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. எலிக்காய்ச்சல் அதிகளவிலுள்ள அடையாளம காணப்படும் பிரதேசங்களுக்கு இலவசமாக எதிர்ப்பு மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவிக்கிறது.