நெதர்லாந்து சுற்றுலாப்பயணிகள் மூவர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு அமைச்சர பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். 

குறித்த நெதர்லாந்து பிரஜைகள் தங்கியிருந்த தம்புள்ளை பகுதியிலுள்ள ஹோட்டல் துர்நாற்றம் வீசுவதாகவும், அசுத்தமாக உள்ளதாகவும் கூறி பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந் நிலையிலேயே அமைச்சர் மேற்கண்ட உத்தரவை விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்களை தடுக்க உயர்ந்தபட்ச நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுற்றுலாப்பயணிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை முடிந்தளவு குறைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.