சட்டவிரோத இரண்டு மீன் பிடி ஸ்பியர் துப்பாக்கிகளுடன் உக்ரைன் நாட்டு பிரஜை ஒருவரை காலி - தல்பே பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த வெளிநாட்டு பிரஜையுடன் இருந்த இலங்கை பிரஜை ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காலி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது தலா 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் இருவரையும் நீதவான் விடுவிக்க உத்தரவு வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.