வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை மேலும் இரு தினங்களில் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் எதிர்பார்த்ததை விடவும் குப்பைகள் குவிந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே காலதாமதம் ஏற்படுகின்றது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெள்ளம்பிட்டி, கொலன்னாவ மற்றும் கொடிகாவத்த பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் இன்றைய தினத்திற்குள் முடிவுக்கு கொண்டுவருவதாக தெரிவித்திருந்த நிலையில் மேலும் தாமதம் அடைவது குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.